பிக்பாஸ் 8: விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு? ஒரு எபிசோடுக்கு இத்தனை கோடியா!

Bigg Boss 8 Tamil Vijay Sethupathi Salary : பிக்பாஸ் சீசன் 8 விரைவில் தொடங்க இருப்பதை ஒட்டி, இதில் புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி இணைந்திருக்கிறார்.   

Written by - Yuvashree | Last Updated : Sep 6, 2024, 03:37 PM IST
  • பிக்பாஸ் 8 விரைவில் தொடங்க இருக்கிறது
  • புதிய தொகுப்பாளராக வருகிறார் விஜய் சேதுபதி
  • இவரது சம்பளம் எவ்வளவு?
பிக்பாஸ் 8: விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு? ஒரு எபிசோடுக்கு இத்தனை கோடியா! title=

Bigg Boss 8 Tamil Vijay Sethupathi Salary : தமிழில் இருக்கும் ரியாலிட்டி ஷோக்களுள், மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இருப்பது, பிக்பாஸ். ஆங்கிலத்தில் முதலில் ‘பிக் பிரதர்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, பின்பு இந்தியில் பிக்பாஸ் என்று ஆரம்பிக்கப்பட்டது. தமிழில், கடந்த 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க ஆரம்பித்தார். 

பிக்பாஸ் 8:

சுமார் 7 சீசன்களை தமிழ் மொழியில் கடந்திருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது, 8வது சீசனை எட்டியிருக்கிறது. கடந்த 7 சீசன்களில் ஒரு சில சீசன்கள் பெரிய ஹிட்டை அடித்திருக்கின்றன. ஒரு சீசன்கள் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறாமல் இருந்திருக்கிறது. 

பிக்பாஸ் ஷோவில் இருந்து விலகிய கமல்ஹாசன்..

சில வாரங்களுக்கு முன்னர் நடிகர் கமல்ஹாசன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், தான் ஏற்கனவே பல படங்களில் கமிட்டாகி விட்டதால் தன்னால் இனி பிக்பாஸில் தொகுப்பாளராக தொடர முடியாது என்று தெரிவித்தார். இதையடுத்து, புதிய பிக்பாஸ் தொகுப்பாளர் யார் என்பது குறித்து அனைவருக்கும் ஆர்வமாக இருந்தது. 

புதிய பிக்பாஸ் தொகுப்பாளர்..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய தொகுப்பாளராக இணைந்திருப்பவர், நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் திரையுலகில், துணை கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து, இன்று பாலிவுட்டிலும், தென்னிந்திய அளவிலும் பெரிய நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார். இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 

மேலும் படிக்க | பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்.. முழு லிஸ்ட் இதோ

சம்பளம் எவ்வளவு? 

நடிகர் விஜய் சேதுபதி, பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு அவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில்,அவருக்கு சுமார் ரூ.50 காேடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு எபிசோடுக்கு சுமார் ரூ.1 கோடி சம்பளமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசனுக்கு, சுமார் ரூ.120 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

BiggBoss

நடுநிலையாக இருப்பாரா? 

இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன், முதல் சீசனில் இருந்து 6வது சீசன் வரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் நல்ல பெயரையே எடுத்து வந்தார். ஆனால், கடந்த சீசனில் கமல்ஹாசன் செய்த, பேசிய சில விஷயங்கள் ட்ரோல் ஆக ஆரம்பித்தது. அதிலும் குறிப்பாக முக்கிய பாேட்டியாளராக இருந்த மாயாவையும் கமல்ஹாசனையும் சேர்த்து வைத்து பேச ஆரம்பித்தனர். இந்த ட்ரோல்ஸ்களுக்கெல்லாம் அசராத ஆள், கமல்ஹாசன் என்றாலும், அவர் ஏஐ குறித்த படிப்பு படிக்க போவதாலும், பட ஷூட்டிங்கினாலும் பிக்பாஸில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. 

கமலிடம் பலருக்கு பிடித்த விஷயம், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாள்கள் இடையில் நடுநிலையாக இருந்தார் என்பதுதான். இதே போல, விஜய் சேதுபதியும் இருப்பாரா? என ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கு முன்னர், விஜய் சேதுபதியும் ஒர சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார். அந்த ஷோ பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை என்றாலும், விஜய் சேதுபதி தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை திறம்பட செய்தார். இதனால், இவர் மீது ரசிகர்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது.

மேலும் படிக்க | பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர்! பிரபல சீரியல் ஹீரோவாம்..யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News