ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ் கொடுத்த EPFO: ஓய்வூதிய முறையில் மாற்றம், அதிக வசதிகள்

EPS Pension: இனி பணியாளர்கள் ஓய்வு பெற்றவுடன், இபிஎஸ் ஓய்வூதியத்தின் முழுப் பலனும் அவர்களது கணக்கில் சம்பளம் போல வந்து சேரும். இனி நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும், அனைத்து கிளைகளிலும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத் தொகையை எடுத்துக்கொள்ளலாம்.

EPS Pension: 2025 ஆம் ஆண்டு ஓய்வூதிய அமைப்பில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இனி, பணி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதிய ஆணைக்கு ஒப்புதல் பெற, ஊர் ஊராக அலையும் அவலம் முடிவுக்கு வரவுள்ளது. ஓய்வூதிய தொகைக்காக மாதக்கணக்கில் காத்திருந்து வீணடிக்க வேண்டிய அவசியமும் இருக்காது. இது CPPS ஆல் சாத்தியமானது. மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவு முறை அதாவது CPPS என்பது ஓய்வூதியம் பெறுவோர் இந்தியாவில் எங்கும் ஓய்வூதியம் பெற அனுமதிக்கும் ஒரு வசதி. 

1 /11

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO மூலம் நிர்வகிக்கப்படும் ஓய்வூதிய அமைப்பான ஊழியர் ஓய்வூதிய அமைப்பு புத்தாண்டில் பல நல்ல செய்திகளை அளித்துள்ளது. இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு பல புதிய வசதிகள் கிடைத்துள்ளன.

2 /11

2025 ஆம் ஆண்டு ஓய்வூதிய அமைப்பில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இனி, பணி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதிய ஆணைக்கு ஒப்புதல் பெற, ஊர் ஊராக அலையும் அவலம் முடிவுக்கு வரவுள்ளது. ஓய்வூதிய தொகைக்காக மாதக்கணக்கில் காத்திருந்து வீணடிக்க வேண்டிய அவசியமும் இருக்காது. இது CPPS ஆல் சாத்தியமானது.

3 /11

மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவு முறை அதாவது CPPS என்பது ஓய்வூதியம் பெறுவோர் இந்தியாவில் எங்கும் ஓய்வூதியம் பெற அனுமதிக்கும் ஒரு வசதி. இதில், ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதியம் செலுத்தும் உத்தரவை ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்திற்கு அல்லது வங்கிக்கு செலுத்த வேண்டியதில்லை.

4 /11

 இனி பணியாளர்கள் ஓய்வு பெற்றவுடன், இபிஎஸ் ஓய்வூதியத்தின் முழுப் பலனும் அவர்களது கணக்கில் சம்பளம் போல வந்து சேரும். இனி நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும், அனைத்து கிளைகளிலும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத் தொகையை எடுத்துக்கொள்ளலாம். ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்கில் மாதாந்திர ஓய்வூதியமும் டெபாசிட் செய்யப்படும். அதன் பின்னர், எந்த ஏடிஎம்மிற்கு வேண்டுமானாலும் சென்று இந்த தொகையை எடுத்துக்கொள்ளலாம்.

5 /11

EPPO அதாவது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய முறையை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம், ஒட்டுமொத்த ஓய்வூதிய அமைப்பிலும் புரட்சிகரமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முதல் 68 லட்சம் பேர் இதனால் பயனடைவார்கள்.

6 /11

EPFO எடுத்த புதிய நடவடிக்கைகளுக்குப் பிறகு, பணியாளர்கள் தங்கள் இருப்பிடம் அல்லது வங்கிக் கிளையை மாற்றினாலும், அது ஓய்வூதிய வசதியைப் பெறுவதற்குத் தடையாக இருக்காது. EPFO இன் ஆன்லைன் அமைப்பு அனைத்து பிராந்திய அலுவலகங்களிலிருந்தும் PF தொடர்பான அனைத்து தகவல்களையும் சேகரித்து ஓய்வூதிய பலன் அறிக்கையை தயார் செய்து ஊழியர்களுக்கு கிடைக்கச்செய்யும்.

7 /11

இதுவரை நடைமுறையில் உள்ள ஓய்வூதிய விநியோக முறையில் EPFO ​​இன் ஒவ்வொரு பிராந்திய அலுவலகமும் 3 அல்லது 4 வங்கிகளுடன் மட்டுமே ஒப்பந்தங்களைக் கொண்டிருந்தது. அங்கிருந்து மட்டும்தான் ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத்தைப் பெற முடியும்.

8 /11

இதன் மூலம் குறிப்பிட்ட 2-3 வங்கிகளில் இருந்து மட்டும்தான் ஓய்வூதியம் பெற முடியும் என்ற நிலையும் இனி இருக்காது. இப்போது இபிஎஸ் ஓய்வூதியத்தை நாட்டில் உள்ள எந்த வங்கியிலிருந்தும் வங்கி கிளையிலிருந்தும் திரும்பப் பெறலாம். இப்படி பல வழிகளில் ஓய்வூதிய முறை நவீனமயமாக்கப்பட்டுள்ளதால், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் அதிகரித்துள்ளன.

9 /11

இது குறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “சென்ட்ரலைஸ்டு பென்ஷன் பேமென்ட் சிஸ்டத்தின் (சிபிபிஎஸ்) சோதனை ஓட்டத்தின் கீழ், ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் கர்னால் பகுதிகளைச் சேர்ந்த 49000க்கும் மேற்பட்ட இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு அக்டோபர் மாதத்தில் சுமார் ரூ.11 கோடி ஓய்வூதியமாக வழங்கப்பட்டுள்ளது. செயல்முறை வெற்றிகரமாக முடிந்தது." என கூறினார்.

10 /11

புதிய மையப்படுத்தப்பட்ட முறையில், ஓய்வூதிய ஆணை தயாரிக்கப்பட்ட பிறகு, ஓய்வூதியத்தை எடுக்க வங்கிக் கிளைக்குச் சரிபார்ப்புக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. ஓய்வூதியத் தொகை வெளியிடப்பட்டவுடன் நேரடியாக ஓய்வூதியதாரர்களின் கணக்கில் மாற்றப்படும். ஓய்வூதியம் பெறுவோர், ஓய்வு பெற்ற உடனேயே, சொந்த ஊருக்கு மாறினாலும், மத்திய ஓய்வூதியம் வழங்கும் முறையின் மூலம் புதிய ஓய்வூதிய வசதிகளைப் பெறுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது.

11 /11

அரசின் இந்த நடவடிக்கையானது EPF உறுப்பினர்களுக்கு பல வசதிகளை வழங்குவதோடு, அவர்களது நேரத்தையும் மிச்சப்படுத்தும் என்பதில் சந்தெகமில்லை.