5 நிமிடம் நடிக்க 2 கோடி சம்பளம்! அநியாயம் செய்யும் பிரபல நடிகை..யார் தெரியுமா?

Actress Nora Fatehi : ஒரு நடிகை, 5 நிமிடம் படத்தில் நடிப்பதற்காக 2 கோடி சம்பளம் கேட்கிறாராம்.யார் அந்த நடிகை தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Aug 3, 2024, 06:33 PM IST
  • 5 நிமிட பாட்டுக்கு 2 கோடி சம்பளம்
  • அந்நியாயம் செய்யும் பாகுபலி பட நடிகை
  • யார் தெரியுமா?
5 நிமிடம் நடிக்க 2 கோடி சம்பளம்! அநியாயம் செய்யும் பிரபல நடிகை..யார் தெரியுமா?  title=

Actress Nora Fatehi : இந்திய திரையுலக பொருத்தவரை நடிகைகளைவிட இப்போதும் நடிகர்களுக்கு தான் சம்பளம் அதிகம். ஒரு படத்தை எடுத்துக் கொண்டால் அதில் ஒரு ஹீரோவுக்கு எவ்வளவு சம்பளம் இருக்கிறதோ அதில் பாதி கூட ஹீரோயினுக்கு கிடைத்திருக்காது. காரணம், பெரும்பாலான திரைப்படங்களில் இருக்கும் கதைகள், ஹீரோவை சுற்றி சுழலும் வகையிலேயே எடுக்கப்படுகின்றன. அதனால் நாயகிகளுக்கு காட்சிகள் குறைவாக தான் வைக்கப்படுகிறது. இதனால்தான் அவர்களுக்கு படத்தில் முக்கியத்துவம் அதற்கு கொடுக்கப்படும் சம்பளமும் குறைவாக இருக்கிறது.  ஆனால் இங்கு ஒரு நடிகை, ஐந்து நிமிடத்திற்கு நடிக்க பல கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்.அவர் யார் தெரியுமா?

நோரா ஃபட்டேகி:

சமீப காலமாக பல படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வரும் நடிகை, நோரா ஃபட்டேகி. 32 வயதாகும் இந்த நடிகை ஹிந்தி தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்துவருகிறார். 2014 ஆம் ஆண்டு சித்திரை உலகுக்குள் நுழைந்த இவர் ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களின் நடித்து வந்தார். பின்பு தெலுங்கு படம் ஒன்றில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்து டான்ஸ் ஆடினார். இது அவருக்கு நன்றாக வொர்க் அவுட் ஆக தொடர்ந்து அதே போல பல படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி வருகிறார். இதில் குறிப்பாக 2015 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி படத்தில் இவர் இடம்பெற்று இருந்தது தான் ரசிகர்களை பெருமளவு ஈர்த்தது. அதில் வரும் மனோகரி பாடலில் நடனமாடும் மூன்று பெண்களின் இவரும் ஒருவர்.  

மேலும் படிக்க | Kalki 2898 AD : கல்கி படத்தில் அதிக சம்பளம் யாருக்கு? ‘அந்த’ நடிகருக்குதான்...

சம்பளம்: 

பல நடிகைகள் தற்போது தங்கள் படங்களில் நடிப்பது மட்டுமின்றி வேறு ஹீரோக்கள் நடிக்கும் படங்களிலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி வருகின்றன. ஜேஜே படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த பிரியங்கா கோத்தாரி, கச்சேரி ஆரம்பம் படத்தில் ஒரு பாடலில் ஆடி இருந்தார். அதேபோல, நடிகை அஞ்சலியும் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். இதற்காக அவர்கள் குறிப்பிட்ட தொகையை சம்பளமாக பெறுகின்றனர். இவர்களுக்கு தற்போது சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் நோரா ஃபட்டேகி. 

Nora Fatehi

இவர்,5 நிமிட பாடலுக்கு நடனமாட, 2 கோடி சம்பளமாக கேட்கிறாராம். இந்த சம்பள தொகையை கொடுத்து அவரை ஆட வைக்க தயாராக இருக்கிறார்களாம், சில படக்குழுவினர். இதையடுத்து நேரா ஃபட்டேகியின் காட்டில் ஒரு பண மழை பொழிவதாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, இவரை தேடி பல்வேறு பட வாய்ப்புகள் வந்து காெண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | 6 நாள் நடித்து கொடுக்க இத்தனை கோடி சம்பளமா! அசரவைத்த கமலின் சம்பள விவரம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

Trending News