Dhanush To Act In Late Comedy Actor Biopic Movie : கோலிவுட் திரை உலகை தாண்டி இப்போது ஹாலிவுட் வரை சென்றிருக்கும் தமிழ் நடிகர் தனுஷ். தமிழ், தெலுங்கு, இந்தி என வெவ்வேறு மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்துக் கொண்டிருக்கும் இவர், அடுத்த வருடத்தின் பிசியான நடிகராகவும் இருக்கிறார். இவர் ஏற்கனவே ஒரு பிரபல சினிமா கலைஞரின் படத்தில் நடிக்க இருப்பதை தொடர்ந்து, இன்னொரு வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
யாருடைய கதை?
தமிழ் திரையுலகில் சிறந்த கலைஞர்களுள் ஒருவராக வலம் வந்தவர் சந்திரபாபு. இவருக்கு ‘நகைச்சுவை மன்னன்’ என்ற சிறப்புப் பெயரும் உள்ளது. ஒரு நடிகருக்கு நடிப்பு திறமை மட்டும் தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டியவர் சந்திரபாபு. ஓவியம், இசை, நாடகம், பாடல் என பல கலைகளில் சிறந்து விளங்கியவர் இவர். இவரது காமெடி நடிப்பை பிடித்தவர்கள் இவரை தென்னகத்து சார்லி சாப்ளின் என அழைத்ததுண்டு.
தற்போதைய காலகட்டத்தில் இவர் போன்று நடிகர்கள் யாரும் இல்லை என்றாலும், இவரைப் போன்ற கலைஞர்களின் கதையை பயோபிக்காக எடுப்பது வாடிக்கையாகி வருகிறது. நடிகர் தனுஷ், இப்போது இவர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
யார் இந்த சந்திரபாபு?
1940-1960 காலக்கட்டத்தில் புகழ்பெற்ற நடிகராக விளங்கியவர், சந்திரபாபு. தன அமராவதி படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்த இவர், அதன் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். இதையடுத்து இவர் நடித்த சகோதரி, புதையல், நாடோடி மன்னன், ராஜா, கவலை இல்லாத மனிதன், அடிமைப்பெண் உள்ளிட்ட படங்கள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார். 1940களில் அப்போதைய ஸ்டார் நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்ட நடிகருகு இணையாக புகழ்பெற்றவர்.
1973-ல் கடைசியாக பாரத விலாஸ் படத்தில் நடித்த இவர், அத்துடன் திரையுலகில் இருந்து சில நாட்கள் பிரேக் எடுத்து டெல்லிக்கு சென்றார். இவர், தனது இறுதி நாட்களை மது குடித்து கழித்ததாக கூறப்படுகிறது. தனது 46வது வயதில் உயிரிழந்தார்.
தனுஷ் எற்கனவே நடிக்கும் பயோபிக்!
நடிகர் தனுஷ், இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் ஏற்கனவே இன்னொரு பயோபிக் படத்தில் நடிக்க கமிட் ஆனார். இது, இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு ஆகும். இப்படத்தை கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாத்தேஸ்வரன் இயக்கியிருக்கிறார்.
மேலும் படிக்க | கைவிடப்படும் இளையராஜாவின் பயோபிக் படம்? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
81 வயதாகும் இளையராஜாவின் வாழ்க்கை கதையில் நடிப்பதை, பெரிய பாக்கியமாக கருதிய தனுஷ், இதற்காக தன்னை முழுமையாக தயார் படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இதில், இளையராஜா, அருண் மாத்தேஸ்வரன், தனுஷ், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அடுத்து வெளியாக இருக்கும் படங்களில், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படமாக இருக்கிறது, இளையராஜாவின் பயோபிக்.
தனுஷின் படங்கள்:
2025ஆம் ஆண்டு, தனுஷுக்கு பிசியான ஆண்டாக இருக்கிறது. இவர், எழுதி இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படத்தின் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. அடுத்த ஆண்டு இந்த படத்துடன், அவர் இயக்கியிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் வெளியாக இருக்கிறது. இத்துடன் வெற்றி மாறனுடன் ஒரு படத்திலும், மாரி செல்வராஜின் ஒரு படத்திலும் இவர் நடிக்க இருப்பதாக தகவலகள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து: பிள்ளைகள் 2 பேரும் யாருடன் இருப்பார்கள்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ