ராயன் படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு? தெரிந்தால் வாயை பிளப்பீர்கள்..

Raayan Dhanush Salary : தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் ராயன் திரைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் நடிக்க தனுஷ் வாங்கியிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jul 26, 2024, 02:08 PM IST
  • ராயன் படத்தின் ஹீரோ தனுஷ்
  • தனுஷே இயக்கி நடித்திருக்கிறார்
  • இதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு?
ராயன் படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு? தெரிந்தால் வாயை பிளப்பீர்கள்.. title=

Raayan Dhanush Salary : கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர், தனுஷ். நடிகராக மட்டுமன்றி, பா.பாண்டி படம் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்த இவர், தற்போது ‘ராயன்’ படத்தையும் தானே இயக்கி நடித்திருக்கிறார். இந்த படம், ஜூலை 26ஆம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. 

ராயன் திரைப்படம்:

தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் ராயன் திரைப்படம், இவரது 50வது படமாகும். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக வருகிறார். இவர்களை தவிர தனுஷின் அண்ணன் செல்வராகவனும் முக்கிய பாத்திரமாக வருகிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசையமைத்திருக்கிறார். 

ராயன் படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்ததற்கு காரணம், தனுஷின் இயக்கத்திற்காகவும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்காகவும்தான். அது மட்டுமன்றி, படம் கேங்க்ஸ்டர் டிராமாவாகவும் இருப்பதை டீசர் மற்றும் டிரைலர் மூலம் ரசிகர்கள் அறிந்து கொண்டனர். இந்த நிலையில், இப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. 

தனுஷின் சம்பளம்:

நடிகர் தனுஷ், தமிழ் திரையுலகில் மட்டுமன்றி பாலிவுட் திரையுலகிலும் பிரபலமான நடிகராக இருக்கிறார். இதனால், அவர் சம்பளமும் முன்னர் இருந்ததை விட கணிசமாக உயர்ந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார், தனுஷ். இதில் நடிக்க அவர், சுமார் ரூ.40 கோடி வரை சம்பளமாக வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதை தவிர, ஒரு படத்திற்கு அவர் சுமார் ரூ.50 கோடி சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது. தற்போது ராயன் படத்திற்கும் அவர் அந்த தொகையைத்தான் சம்பளமாக வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | Dhanush : 40 வயதில் நடிகர் தனுஷிற்கு 2வது திருமணம்!? மணப்பெண் ‘இப்படி’ இருப்பாராம்..

ராயன் விமர்சனம்:

ராயன் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இது, கேங்க்ஸ்டர் டிராமா என்பதால் பெரிதும் குடும்பத்துடன் இந்த படத்திற்கு யாரும் செல்லவில்லை என கூறப்படுகிறது. மேலும், படத்தின் முதல் பாதி பயங்கரமாக இருப்பதாகவும், அடுத்த பாதி கொஞ்சம் சொதப்பலாக இருப்பதாகவும் ஒரு சிலர் தங்களின் விமர்சனங்களை தெரிவிக்கின்றனர். படம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. 

தனுஷின் அடுத்தடுத்த படங்கள்:

நடிகர் தனுஷ், தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார். தான் இயக்கும் படங்களில் ஏதேனும் ஒரு கதாப்பாத்திரத்திலாவது நடிக்கும் அவர், தற்போது இயக்க இருக்கும்  ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் இயக்குநராக மட்டும் பணியாற்றுகிறாராம். இதில், மாத்யூ தாமஸ், அனேகா உள்ளிட்ட இளம் நடிகர்-நடிகைகள் நடிக்க இருக்கின்றனர். இது மட்டுமன்றி, தனுஷ் தற்போது குபேரா படத்திலும் நடித்து வருகிறார். இதில், அவருக்கு ஜோடி ராஷ்மிகா மந்தனா. இந்த படத்தை, ஷேகர் கமூலா இயக்குகிறார். இதன் வேலைகளும் பரபரப்பாக நடைப்பெற்று வருகிறது. அடுத்து, ராஞ்சனா (அம்பிகாபதி) படத்தின் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் உடன் ஒரு படத்தில் இவர் இணைவதாகவும் கூறப்படுகிறது. இதன் வேலைகளும் தற்போது விறுவிறுப்பாக தொடங்கியிருக்கிறது. 

மேலும் படிக்க | கெத்துக்காட்டியதா ராயன்.. தனுஷ் 50 கலக்கலா? சொதப்பலா? முதல் விமர்சனம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News