தேவர் மகன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா? வைரலாகும் புகைப்படம்

சிவாஜி கணேசன் மற்றும் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் திரைப்படத்தில் நடிகை ரேவதிக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த பிரபல நடிகை யார் என்று பார்க்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 19, 2024, 09:31 AM IST
  • 40வது இந்திய தேசிய திரைப்பட விருதை பெற்றது.
  • இத்திரைப்படம் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
  • படம் குறித்து ஒரு சுவாரசியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
தேவர் மகன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா? வைரலாகும் புகைப்படம்  title=

Thevar Magan Unknown Facts: சிவாஜி கணேசன் மற்றும் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் திரைப்படத்தில் நடிகை ரேவதிக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த பிரபல நடிகை யார் என்று பார்க்கலாம்.

தேவர் மகன்:
கடந்த 1992 ஆம் ஆண்டு தீபாவளி நாளில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் தேவர் மகன் (Thevar Magan) ஆகும். கமல்ஹாசன் இத்திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை மொத்தம் ஏழு நாட்களுக்குள் எழுதி முடித்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அவருடன் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், கௌதமி, ரேவதி, நாசர், தலைவாசல் விஜய், வடிவேலு, காக்கா ராதாகிருஷ்ணன், சங்கிலி முருகன், எஸ்.என்.பார்வதி என்று பல பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் இந்த படமானது பெயர் சொல்லும் படமாக அமைந்தது.

பல விருதுகள்:
இப்படி சூப்பர் டுப்பர் ஹிட் அடித்த தேவர் மகன் திரைப்படம் 1992 ஆண்டிற்கான 40வது இந்திய தேசிய திரைப்பட விருதை பெற்றது, அதுவும் இத்திரைப்படம் பல பிரிவுகளில் 5 விருதுகளை வென்றது. இத்திரைப்படம் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. படத்தின் கதை, திரைக்கதையைவிட கமல்ஹாசனின் வசனங்கள் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டன. அவ்வளவு வீரியமான வசனங்கள் இந்தப் படத்தில் இருந்தன. அதுமட்டுமின்றி இந்த இத்திரைப்பட வெற்றியினை அடுத்து இந்தியில் விரசாத் என்ற திரைப்படப் பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டது.

மேலும் படிக்க | Baahubali The Lost Legends: பாகுபலி அனிமேஷன் படத்தில் கட்டப்பாவிற்கு வாய்ஸ் கொடுத்தவர் யார்?

போற்றிப் பாடடி பொண்ணே - இஞ்சி இடுப்பழகி:
ஒரு பக்கம் படம் ஹிட்டாக, மறுபுறம் இந்த படத்தில் இடம்பெற்று இருந்த அனைத்து பாடல்களும் ஹிட்டானது, குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்று இருந்த 'போற்றிப் பாடடி பொண்ணே' மற்றும் 'இஞ்சி இடுப்பழகி' பாடல்கள் இன்று வரை அதிகம் பேசப்படும் பாடல்கள் ஆகும். அந்த அளவிற்கு இந்த பாடல்கள் மக்களின் மனதை வென்றுள்ளது.

ரேவதிக்கு முன் முதலில் நடித்தது குழந்தை நட்சத்திர நடிகை:
இந்நிலையில் தற்போது இந்த படம் குறித்து ஒரு சுவாரசியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் கமல் மனைவி கதாபாத்திரத்தில் நடிகை ரேவதி நடித்திருப்பார், ஆனால் முதலில் நடிக்கவிருந்தது இவர் கிடையாதாம். அவரது கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகை மீனா தானாம். அதுடன் இந்த படத்தில் மீனாவை வைத்து நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளதாம்.

ஆனால் அவருக்கு கிராமத்து பெண் கதாபாத்திரம் பொருத்தமாக இல்லை என்று முடிவெடுத்த படக்குழு, அவருக்கு பதிலாக நடிகை ரேவதியை நடிக்க வைத்தார்களாம். அந்த கேரக்டரை தன்னைவிட யாரும் சிறப்பாக நடித்துவிட முடியாது என சொல்லும் அளவுக்கு நடிகை ரேவதி இந்த படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | vidaa muyarchi: விடாமுயற்சி படம் தள்ளிப்போக காரணம் என்ன? அஜித்தால் கடுப்பான ரசிகர்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News