கடந்த 2 மாதங்களில் பெரும் வெற்றியடைந்த 5 படங்கள்!! என்னென்ன தெரியுமா?
Kollywood Movies Huge Hits In October And November : தமிழ் திரையுலகில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பல படங்கள் வெளியாகின. இதில், குறிப்பிட்ட 5 படங்கள் மக்களுக்கு பொக்கிஷமாக கிடைத்திருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
Written by -
Yuvashree| Last Updated : Nov 10, 2024, 05:56 PM IST
Kollywood Movies Huge Hits In October And November : 2024ல் இந்த ஆண்டின் முதல் பாதியில் தமிழ் திரையுலகில் பெரிதாக எந்த படங்களும் வெளியாகவில்லை. மிகவும் சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாகின. ஆனால் ஜூலை மாதத்திற்கு பிறகு பல படங்கள் தொடர்ச்சியாக வெளிவர ஆரம்பித்தன. இதையடுத்து, கடந்த 2 மாதங்களில் மட்டும் ரிலீஸான படங்களில் சில மாபெறும் வெற்றி பெற்றிருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
லப்பர் பந்து:
கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாகி வெற்றி பெற்ற படம், லப்பர் பந்து. தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களுடன் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ஸ்வாசிகா, கீதா கைலாசம், திவ்ய தர்ஷினி உள்ளிட்டாேர் நடித்திருக்கின்றனர். இந்த படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றிருக்கிறது. குறைவான பட்ஜெட்டில் உருவான இந்த படம், உலகளவில் சுமார் ரூ.44.36 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
மெய்யழகன்:
கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி மக்களை கவர்ந்த படங்களுள் ஒன்று, மெய்யழகன். இந்த படத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். சி.பிரேம்குமார் இயக்கத்தில் உருவான இந்த படம், திரையரங்குகளில் வெளியான போது ஒரு சிலர் மத்தியில் நெகடிவ் விமர்சனங்களையும், ஒரு சிலரிடையே பாசிடிவான விமர்சனங்களையும் பெற்றது. சமீபத்தில் ஓடிடியில் வெளியான இந்த படத்தை பலர் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்தனர். இப்படம் உலகளவில் ரூ.35 கோடி அளவில் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படமும், சினிமாவில் எப்போதாவது வரும் படங்களுள் ஒன்று எனக்கூறப்படுகிறது.
வேட்டையன்:
ரஜினிகாந்த் நடிப்பில், டி.ஜே ஞானவேல் இயக்கியிருந்த படம், வேட்டையன். இதில் ராணா டகுபதி, பகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தின் கதை நன்றாக இருப்பினும் இது ரஜினிக்கு ஏற்ற படம் போல இல்லை என்று கூறப்பட்டது. இருப்பினும் வசூல் ரீதியாக இப்படம் நல்ல வரவேற்பினைத்தான் பெற்றது. இப்படம், தற்போது வரை சுமார் 259 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
வேட்டையன் படம் வெளியான அக்டோபர் 10ஆம் தேதியன்று, போட்டி படமாக வெளியானது பிளாக். ஜீவா நடித்திருந்த இந்த படத்தில் அவருடன் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். கே.ஜி,பாலசுப்பிரமணி இயக்கியிருந்த இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
அமரன்:
தீபாவளியை முன்னிட்டு, கடந்த அக்டோபர் 31ஆம் தேதி உளகளவில் வெளியான படங்களுள் ஒன்று, அமரன். இந்த படம், 2014-ல் மக்களை காக்க தன்னுயிரை கொடுத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வை வைத்து எடுக்கப்பட்ட படமாகும். உலகளவில், தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இந்த படம், மக்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த படம் வெளியாகி 10 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், இது தற்போது வரை சுமார் ரூ.200 கோடி வசூலை கடந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த வரதராஜனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாப்பாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருந்தார். கமல்ஹாசன் தயாரித்திருந்த இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார்.
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.