நடிகர் கார்த்திக் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி

நடிகரும் அரசியல்வாதியும் ஆன கார்த்திக் மூச்சுத் திணறலைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 21, 2021, 05:42 PM IST
  • 2006-ல் கார்த்திக் அரசியலில் நுழைந்தார்.
  • 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் 2018 ஆம் ஆண்டில் அவர் ஏற்படுத்திய மனித உரிமைகள் காக்கும் கட்சி என்ற கட்சிக்கு தலைமை வகிக்கிறார்.
  • சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
நடிகர் கார்த்திக் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி title=

நடிகரும் அரசியல்வாதியும் ஆன கார்த்திக் மூச்சுத் திணறலைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தற்போது அதிமுக தலைமையிலான கூட்டணிக்காக பிரச்சாரம் செய்து வரும் நடிகரும் அரசியல்வாதியும் ஆன கார்த்திக், சனிக்கிழமை மாலை மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சென்னையின் அடையரில் உள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு (ICU) கொண்டு செல்லப்பட்டார். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், COVID-19 பரிசோதனையில், நெகடிவ் என வந்துள்ளது. அவரது உடல்நிலை குறித்த கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

2006-ல் கார்த்திக்  அரசியலில் நுழைந்தார். 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் 2018 ஆம் ஆண்டில் அவர் ஏற்படுத்திய மனித உரிமைகள் காக்கும் கட்சி என்ற கட்சிக்கு தலைமை வகிக்கிறார். கார்த்திக் 2019 பொதுத் தேர்தலின் போது அதிமுகவுடனான தனது கூட்டணி உள்ளதாக கூறியதோடு,  இந்த சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

2011 சட்டமன்றத் தேர்தலின் போது, ​​நடிகர் கார்த்திக் தனது சொந்த அரசியல் கட்சியான அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியை அறிவித்தார், பின்னர்  முன்னாள் முதலவர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, அவர்களது கூட்டணியின் கீழ் அவருக்கு டிக்கெட் கொடுக்க மறுத்தது. அதையடுத்து நடிகர் கார்த்திக் திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தனது கட்சியிலிருந்து குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்தார்.

ALSO READ | நடிகர் கார்த்தியின் சுல்தான் பட ட்ரைலர் எப்போது.. வெளியானது தகவல்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News