Video: நயன்தாராவிடம் காதலை தெரிவித்த யோகி பாபு!

கோலமாவு கோகிலா திரைப்படத்தில் இடம்பெறும் கல்யாண வயசு என்னும் பாடலில் நடிகர் யோகி பாபு, நயன்தாராவிடம் தனது காதலை தெரிவிப்பது போன்ற காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Last Updated : May 15, 2018, 11:19 AM IST
Video: நயன்தாராவிடம் காதலை தெரிவித்த யோகி பாபு! title=

கோலமாவு கோகிலா திரைப்படத்தில் இடம்பெறும் கல்யாண வயசு என்னும் பாடலில் நடிகர் யோகி பாபு, நயன்தாராவிடம் தனது காதலை தெரிவிப்பது போன்ற காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் கோலமாவு கோகிலா. லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடிதான், வேலைக்காரன் ஆகிய இரண்டு படங்களுக்கும் அனிருத் இசையமைத்தார். இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதையடுத்து, நயன்தாரா நடிபில் உருவாகிவரும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். .

முன்னதாக இப்படத்தில் இடம்பெறும் "எதுவரையோ" என்னும் பாடலினை படக்குழுவினர் வெளியிட்டனர். பின்னர் இப்படத்தின் இரண்டவாது பாடலான "கல்யாண வயசு" எனும் பாடலினை வரும் மே 17-ஆம் நாள் படக்குழுவினர் வெளியிடவுள்ளதாக அறிவித்தனர். மேலும் இப்பாடலை எழுதியது நடிகர் சிவகார்த்திகேயன் என்னும் தகவல்கள் இணையத்தில் வைரலானதை அடுத்து அதனை உறுதி செய்யும் வகையில் இசையமைப்பாளர் அனிரூத் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக சிவகார்த்திகேயன் பாடல் எழுதம் காட்சியையும் வெளியிட்டார்.

இந்நிலையில் தற்போது இப்பாடலின் டீஸரினை அனிரூத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த டீஸரில் நயன்தாராவிடம், யோகி பாபு தனது காதலை தெரிவிப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Trending News