பேருந்து ஓட்டும் கேஜிஎஃப் ஹீரோவின் அப்பா - கோடிகளில் சம்பளம் பெறும் யாஷ்

கேஜிஎப் படத்தின் மூலம் தென்னிந்திய உட்சநட்சத்திரமாக உயர்ந்திருக்கும் கேஜிஎஃப் ஹீரோ யாஷின் அப்பா, இன்றும் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 31, 2022, 05:01 PM IST
  • கேஜிஎப் 2 படம் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளது
  • உட்சநட்சத்திரமாக யாஷ் இருக்கும் நிலையில் அவரது அப்பா பேருந்து ஓட்டுநராக உள்ளார்
  • இன்றும் கர்நாடகா மாநில அரசுப் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றுகிறார்
பேருந்து ஓட்டும் கேஜிஎஃப் ஹீரோவின் அப்பா - கோடிகளில் சம்பளம் பெறும் யாஷ் title=

பிரசாந்த் நீலின் கேஜிஎப் 1 படம் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரமெடுத்த யாஷ், சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அவர், இன்று கோடிகளில் ஊதியம் பெற்றாலும் இந்த உயரத்தை அடைய மேற்கொண்ட போராட்டம் வலிகள் நிறைந்தது. அவருடைய அப்பா இன்னும் பேருந்து ஓட்டுநராக பணிபுரிகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

KSRTC-யில் பேருந்து ஓட்டுநர்

ஒரு படத்துக்கு 15 கோடிக்கும் மேலாக ஊதியம் பெறும் கேஜிஎப் ஹீரோ யாஷின் கேஜிஎப் 2 ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், அவருடைய அப்பா அருண்குமார் கர்நாடக மாநில அரசுப் போக்குவரத்து கழக பேருந்தில் இன்றும் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். மகன் உட்ச நடிகராக உயர்ந்தபோதும், அவர் தன்னுடைய வேலையை விடவில்லை. 

ராஜமௌலி வியப்பு 

கன்னட சூப்பர் ஸ்டாராக இருக்கும் யாஷின் அப்பா இன்றும் கர்நாடக மாநில அரசுப் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வருவதை அண்மையில் அறிந்த பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி தன்னுடைய வியப்பையும், ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தினார். இதனை முதலில் நம்ப மறுத்த அவர், பின்னர் யாஷ் ஒரு உண்மையான சூப்பர் ஸ்டார் என பாராட்டினார். உயர்ந்த இடத்தை அடைந்துள்ளபோதும், தான் ஏறி வந்த படிக்கட்டுகளை அவர் மறக்காமல் இருக்கிறார் என்றும் தெரிவித்தார். 

மேலும் படிக்க | 'KGF- 2' வை பாக்க நீங்க ஃபிட்டான ஆளா!? செக் பண்ணிக்க இதைப் படிங்க!

யாஷின் ஆரம்பகால வாழ்க்கை

நடிகர் யாஷ் 1986 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி கர்நாடகாவின் ஹாசன் நகரில் பிறந்தார். தனது குழந்தைப் பருவத்தை மைசூரில் கழித்த யாஷ், அங்குள்ள மகாஜன் கல்விச் சங்கத்தில் படிப்பை முடித்தார். யாஷ் வளர்ந்ததும் பஸ் டிரைவராக சில நாட்கள் பணிபுரிந்துள்ளார். அதன்பிறகு, புகழ்பெற்ற நாடக ஆசிரியர் பி.வி.காரந்த் உருவாக்கிய பெனகா நாடகக் குழுவில் சேர்ந்து கொண்டார். 

கன்னட தொலைக்காட்சியில் நந்த கோகுல என்ற சீரியலில் திரை வாழ்க்கையைத் தொடங்கிய யாஷ், தொடர்ச்சியாக பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றினார். பின்னர் 2008-ல் இயக்குனர் ஷஷாங்கின் 'மோகின மன்சு' திரைப்படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். யாஷின் உண்மையான பெயர் நவீன் குமார் கவுடா. இப்போது ஒரு படத்துக்கு 15 கோடி ரூபாய் ஊதியம் வாங்குவதாக கூறப்படுகிறது. 

KGF அத்தியாயம் 2

யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் KGF படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்கள் பெற்ற டிரெய்லர் என்ற சாதனையையும் படைத்துள்ளது. 24 மணி நேரத்தில் 109 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை யூடியூப்பில் பெற்றுள்ளது. பாக்ஸ் ஆஃபீஸில் மிகப்பெரிய வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | "ஓரின சேர்க்கையை" போற்றும் ராம் கோபால் வர்மாவின் "டேன்ஜரஸ்" படம் சர்ச்சையில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News