Kavin New Movie: கவின் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் டான்ஸ் மாஸ்டர்

சமீபத்தில் நடிகர் கவின் நடித்துள்ள டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதிலும் நகர்ப்புறங்களில் மல்டிப்ளக்ஸ் ரசிகர்களை இந்த படம் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 16, 2023, 10:23 AM IST
  • கவின் நடிக்கும் அடுத்த படம்.
  • பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்தவர் சீரியல் நடிகர் கவின்.
  • டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி.
Kavin New Movie: கவின் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் டான்ஸ் மாஸ்டர் title=

நடிகர் கவின் நடிக்கயுள்ள புதிய பட அறிவிப்பு: அறிமுக இயக்குநர் கணேஷ் கே. பாபுவின் உருவாக்கத்தில் நடிகர் கவினின் நடிப்பில் கடந்த பிப். 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம், 'டாடா'. இப்படத்தை அம்பேத் குமார் தயாரித்திருந்தார். இந்த படத்தில் நடிகர்கள் பாக்யராஜ், அபர்ணா தாஸ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டாடா திரைப்படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி ஓடிடியிலும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதற்கிடையில் டாடா திரைப்படம் மூன்றே வாரத்தில் 15 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது. மேலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் இன்னும் அதிகமாக வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | சிம்புவின் STR 48 படத்தில் நடிக்கும் கமல்ஹாசன்? லேட்டஸ்ட் அப்டேட்!

தந்தையாக, கணவனாக வென்றரா கவின்..  -டாடா மூவி விமர்சனம்

இந்த நிலையில் தற்போது கவின் நடித்த 'டாடா’ படத்தின் வெற்றி காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கூறப்பட்டது. அந்த வகையில் தற்போது வந்துள்ள தகவலின்படி கவின் அடுத்த படத்தை இயக்குவது டான்ஸ் மாஸ்டர் சதீஷ் என்று தகவல் வெளியாகி உள்ளன. இந்த படத்தை ரோமியோ பிச்சர்ஸ் ராகுல் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த திரைப்படமும் காதல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படம் என சொல்லப்படுகிறது.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் மற்ற நடிகர் நடிகைகளின் விவரம் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் நடன இயக்குனர் சதீஷ் எனை நோக்கி பாயும் தோட்டா, மாஸ்டர், பீஸ்ட், திருச்சிற்றம்பலம் போன்ற பல படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | விஜய்யின் லியோ படத்தால் தள்ளி போகும் அட்லீயின் ஜவான்! ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News