கடந்த 2012ம் ஆண்டு வெளியான 'பீட்சா' படத்தின் மூலம் ரசிகர்களது கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தனது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார். இந்த படத்தின் வெற்றியினை தொடர்ந்து ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் சிறப்பான இயக்குநர்களுள் ஒருவராக இருந்து வருகிறார். சமீபத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரமை வைத்து இவர் இயக்கிய மகான் படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கார்த்திக் சுப்புராஜ் 'ஜிகர்தண்டா-2' படத்தின் பணிகளில் பிசியாக இருந்து வருகிறார், இப்படத்தின் நடிக்கப்போகும் நடிகர்களை தேர்வு செய்து வருகிறார். 'ஜிகர்தண்டா-2' படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது, இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க | ரசிகர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த 'சூர்யா 42' படக்குழுவினர்!
சமீபத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேட்டியொன்றில் கலந்துகொண்டு பல சுவாரஸ்யமான தகவலை கூறினார். அதில் அவரிடம் நடிகர் விஜய்யுடன் படம் பண்ணுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்தவர், தான் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜய்க்காக ஒரு கதையை தயார் செய்து அவரிடம் கொடுத்ததாகவும், ஆனால் அந்த கதை அவரது எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமையாததால் அவர் அந்த படத்தில் நடத்தில் ஒப்புக்கொள்ளவில்லை. அவரது மனநிலை எனக்கு புரிந்தது, அவருக்கு பொருத்தமான கதையை விரைவில் தயார் செய்வேன் என்று கூறினார். மேலும் ஒரு கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படத்தை விஜய்யை பண்ண வேண்டும் என்கிற ஆசை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்குனர் என்பது மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருக்கிறார். சமீபத்தில் வைபவ் நடிப்பில் வெளியான 'பபூன்' படத்தை இவர் தனது ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருந்தார். மேலும் ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கும் 'ஆர்சி15' படத்திற்கு இவர் கதை எழுதுகிறார்.
மேலும் படிக்க | துணிவு படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் இவரை பற்றியா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ