அதிகாரப்பூர்வ அறிவிப்பு கபாலி இசை வெளியீடு- ஜூன் 12

Last Updated : Jun 3, 2016, 04:04 PM IST
அதிகாரப்பூர்வ அறிவிப்பு கபாலி இசை வெளியீடு- ஜூன் 12 title=

அனைவரும் ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் ரஜினியின் கபாலி பட இசை வெளியீட்டுத் தேதியை கலைப்புலி தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

வரும் ஜூன் மாதம் 12-ம் தேதி சென்னையில் கபாலி பட இசை வெளியீடு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார். இந்திய திரையுலகிலிருந்து முக்கிய பல நடிகர் நடிகைகள் பங்கேற்கவிருக்கிறார்கள். படத்தின் விநியோகத்தில் கவனம் செலுத்தி வந்த தாணு அவர்கள் தற்போது இசை வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளார். ஆனால் பட ரீலீஸ் தேதியை அறிவிக்கவில்லை. 

ஏற்கனவே கபாலி டீஸர்  வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்றது.

Trending News