விக்ரம் படத்தின் கதை இதுதானா? இணையத்தில் வெளியான தகவல்

கமல்ஹாசன், பஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி  ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்தின் கதை கசிந்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 23, 2022, 10:12 AM IST
  • விக்ரம் படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளது.
  • இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.
  • விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் இப்படத்தில் நடித்து உள்ளனர்.
விக்ரம் படத்தின் கதை இதுதானா? இணையத்தில் வெளியான தகவல் title=

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம், இந்த திரைப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.  இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஷிவானி நாராயணன், மஹேஸ்வரி, நந்தினி போன்ற பலர் நடித்துள்ளனர்.  இந்த 2022-ம் ஆண்டின் பாதியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் தான் இந்த விக்ரம்.  இந்த படத்தில் கமல், பஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி போன்ற மூன்று பெரிய நடிகர்கள் இணைந்து நடிப்பது இப்படத்திற்கு கூடுதல் பலத்தையும், அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்த வழிவகுத்துள்ளது.

மேலும் படிக்க | விஜய்க்காக காத்திருக்கும் பிரபல இயக்குநர்

ஏற்கனவே இந்த படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிகர் அமிதாப் பச்சன் 37 வருடங்களுக்கு பிறகு நடிகர் கமலுடன் இணைந்து நடிக்க இருப்பாதகவும் சில தகவல்கள் வெளியானது.  இந்நிலையில் தற்போது இப்படத்தின் கதை குறித்து சில தகவல் கசிந்துள்ளது, அதன்படி கமல், பஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய மூவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.  மேலும் வெளியான தகவலின்படி, விஜய் சேதுபதி கைதாகி சிறையில் இருக்கும் ஒரு பயங்கரமான கும்பலை சேர்ந்தவர் என்றும், அவரை விடுவிக்க ஃபஹத் கைதியாக ஒரு குற்றத்தைச் செய்து கைதியாக மாறி சிறைக்குள்ளே செல்ல முயற்சிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

movies

இப்படத்தில் நடிகர் கமல் ஒரு ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், இவர் ஆள்மாறாட்டம் செய்து சிறைக்குள் சென்று விஜய் சேதுபதியை, பஹத் பாசில் மீட்டெடுக்கும் முயற்சியை தடுக்கிறார்.  இந்த படம் மிகுந்த பரபரப்பாக இருக்கும் என்றும் நிச்சயம் ரசிகர்களுக்கு ஏற்ற பொழுதுபோக்கான படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.  இப்படத்தின் கதை குறித்து வெளியான தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஜூன்-3ம் தேதி திரையரங்குகளில் வெளியான பிறகு தான் இப்படத்தின் கதை என்னவென்று தெரியவரும்.

மேலும் படிக்க | கடுப்பாகி ட்வீட் செய்த சமந்தா! என்ன நடந்தது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News