துடிக்குது புஜம்.. ஜெயிப்பது நிஜம்..ரஜினியை முந்திய கமல்ஹாசன்!- வேற லெவல் ‘விக்ரம்’!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தின் ட்ரெய்லர் வித்யாசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 18, 2022, 05:02 PM IST
  • கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தின் ட்ரெய்லர் கடந்த 15ஆம் தேதி வெளியானது.
  • யூடியூப்பில் வெளியான விக்ரம் ட்ரெய்லர் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்துவருகிறது
  • இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் விக்ரம்.
துடிக்குது புஜம்.. ஜெயிப்பது நிஜம்..ரஜினியை முந்திய கமல்ஹாசன்!- வேற லெவல் ‘விக்ரம்’! title=

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த 15ஆம் தேதி நடந்தது.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த இவ்விழாவில் திரை நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து அன்றிரவு 8 மணிக்கு இதன் ட்ரெய்லர் வெளியானது. வெளியானதிலிருந்து ஏராளமான பார்வைகளைப் பெற்றுவரும் இந்த ட்ரெய்லர் யூடியூப்பில் தொடர்ந்து ட்ரெண்டிங்கிலும் இருந்துவருகிறது.

அந்த வகையில் தற்போது வரை சுமார் இரண்டே கால் கோடிக்கும் அதிகமான பார்வைகளை இந்த ட்ரெய்லர் பெற்றுள்ளது. அதேபோல லைக்குகளைப் பொறுத்தவரை இது ஒரு மில்லியன் அதாவது 10 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.

                                                    

ஒரு படத்தின் சிங்கிள் ரிலீஸ், ட்ரெய்லர், டீசர் என எதுவாக இருந்தாலும் யூடியூப் ட்ரெண்ட்டிங்கைப் பொறுத்தவரை அதில் பொதுவாக முன்னணி இடம் பிடிப்பது நடிகர் விஜய்தான். பெரும்பாலும் அவரது படங்களே முதலிடத்தில் இருக்கும். அடுத்ததாக அந்தப் பட்டியலில் நடிகர் அஜித் இருப்பார்.

 

மேலும் படிக்க| ‘டான்’ வெற்றிக் கொண்டாட்டம்- பிரியங்கா மோகன் கலந்துகொள்ளாதது ஏன்?! 

அதற்குப் பிறகுதான் மற்ற நடிகர்களின் படங்கள் இருக்கும். ரஜினிகாந்தின் பட ட்ரெய்லர்கள் யூடியூப்பில் பத்து லட்சம் லைக்குகளையேகூட தொட்டதில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் கமலின் இந்த விக்ரம் ட்ரெய்லர் தற்போது 10 லட்சம் லைக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. 

அந்த வகையில் யூடியூப் லைக்ஸில் விக்ரம் ட்ரெய்லர் மூலமாக ரஜினியை முந்தியுள்ளார் கமல்ஹாசன். கமலின் ரசிகர்கள் இந்தத் தகவலை சமூக வலைதளங்களிலும் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.

மேலும் படிக்க | ராம் சரணுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்? - விஜய் படம் கைவிடப்படுகிறதா?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News