கமல்ஹாஸன் சம்பளமே தரவில்லை- கௌதமி!

-

Last Updated : Feb 26, 2018, 09:14 AM IST
கமல்ஹாஸன் சம்பளமே தரவில்லை- கௌதமி! title=

கமல்ஹாசன் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் நடிகை கௌதமி. இந்நிலையில்அவர் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில்:-

கடந்த 2016 அக்டோபரில் கமலை விட்டு நான் விலகி வந்ததில் இருந்து என்னுடைய சொந்த முயற்சியில் எனக்காகவும், எனது மகளுக்காகவும் உழைத்து வருகிறேன். நாங்கள் நல்ல சூழலில் இருக்கிறோம்.

கமலுடன் 13 ஆண்டுகள் இணைந்திருந்த வாழ்வில், அவரது ராஜ்கமல் நிறுவனத்துக்காக ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றினேன். கமல் நடித்த படங்களுக்கும் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி உள்ளேன். தசாவதாரம், விஸ்வரூபம் ஆகிய படங்களுக்கு எனக்கு தர வேண்டிய சம்பள பாக்கி நிலுவையில் உள்ளது.

எனது வாழ்க்கையை நிர்மாணிக்க, நிலுவையில் உள்ள சம்பள பாக்கிதான் ஆதாரமாக உள்ளது. பல முறை கமலிம் அதைக் கேட்டுப்பெற முயற்சித்தேன். அப்படி இருந்தும், இன்னும் எனக்கு சம்பள பாக்கி வர வேண்டியுள்ளது. 

கமல்ஹாசனிடம் ஏற்பட்ட மாற்றங்களும், சுயமரியாதையை இழக்கக்கூடாது என நான் முடிவெடுத்ததும்தான் நாங்கள் பிரியக் காரணம். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Trending News