நடிகர் அஜீத்தின் அடுத்த படத்திற்கு இசையமைப்பளராகும் ஜிப்ரான்

சில நாட்களுக்கு முன்பு யுவன்சங்கர் ராஜா இசையில் வலிமை படத்தின் "நாங்க வேற மாதிரி" என்ற பாடல் வெளியானது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 21, 2021, 06:08 PM IST
நடிகர் அஜீத்தின் அடுத்த படத்திற்கு இசையமைப்பளராகும் ஜிப்ரான் title=

"நடிகர் அஜித் (Ajith) தற்போது ஹெச். வினோத் (H.vinoth) இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். வலிமை படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் (Boni Kapur) மற்றும் ஜி (ZEE Studios) ஸ்டுடியோஸ் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

"சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என வித்தியாசமான கதைக்களத்தை வைத்து இரு வெற்றிப்படங்களை கொடுத்த ஹெச். வினோத் அஜித்தின் வலிமை படத்தினை இயக்குகிறார் என்று தெரிந்ததும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்து வந்தது.

"இதற்கு முன்பு ஹிந்தியில் நடிகர் அமிதாப்பச்சன் (Amithabh bachan) நடித்த பிங்க் (Pink) திரைப்படத்தை அஜித்திற்காக ஒரு சில காட்சிகளை மாற்றியமைத்து தமிழில் "நேர்கொண்டபார்வை படத்தை இயக்கினார். படமும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது.

இதற்கிடையில் மீண்டும் நடிகர் அஜித்தும் இயக்குனர் ஹெச்.வினோத் இருவரும் இணைந்து வலிமை படத்தில் பணியாற்றி வருகின்றனர். கிட்டத்தட்ட இரண்டு வருடகாலமாக படத்திற்கான அப்டேட் (Update) எப்போது படக்குழுவினர் வெளியிடுவார்கள்! என்று ஏக்கத்துடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

ALSO READ | Movie Update: அஜித் - விஜய் சேதுபதி காம்பினேஷன் எப்போது

இதற்கு பலனாக சில நாட்களுக்கு முன்பு யுவன்சங்கர் ராஜா இசையில் வலிமை படத்தின் "நாங்க வேற மாதிரி" என்ற பாடல் வெளியானது. இந்தப் பாடலும் நீண்ட நாட்களாக அப்டேட் கேட்டு காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

படக்குழுவினர் வலிமை திரைப்படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்புகளை வெளிநாடுகளில் எடுத்து வருகின்றனர். இப்படத்தையும் இந்த ஆண்டு தீபாவளிக்கு (Diwali 2021) ரிலீஸ் செய்வதற்கான வேலையில் படக்குழு இறங்கியுள்ளது. இந்நிலையில் மீண்டும் நடிகர் அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் அடுத்து ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ராட்சசன் (Ratchasan) படத்திற்கு இசையமைத்த ஜிப்ரான் (M Ghibran) இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாக ஒரு தகவல் தற்போது உலா வருகிறது.!!

ALSO READ | Thala Ajith Video: தல அஜித்தின் வேற லெவல் வீடியோ; இணையதளத்தில் வைரல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News