ஜெயம் ரவியின் 24-வது படம்: முக்கிய அறிவிப்பு நாளை!!

நடிகர் ஜெயம் ரவியின் 24-வது படம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று நாளை வெளியாகி இருக்கிறது.

Last Updated : Dec 13, 2017, 09:28 AM IST
ஜெயம் ரவியின் 24-வது படம்: முக்கிய அறிவிப்பு நாளை!! title=

நடிகர் ஜெயம் ரவியின் 24-வது படம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று நாளை வெளியாகி இருக்கிறது.

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `டிக் டிக் டிக்'. இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகி இருக்கும், இப்படம் வரும் ஜனவரி 26-ம் தேதி (குடியரசு தினம்) முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இந்த படத்திற்கு பிறகு ஜெயம் ரவி அடுத்ததாக கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். மேலும் இது ஜெயம் ரவியின் 24-வது படமாக ஆகும். 

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு நாளை நள்ளிரவு 12:01 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 

 

 

Trending News