‘ஜெயிலர்’ படத்தின் துணை நடிகருக்கு கிப்ட் கொடுத்த ரஜினி..! யார் அந்த நடிகர் தெரியுமா..?

ஜெயிலர் படத்தில், தான் உபயோகித்த கண்ணாடியை நடிகர் ரஜினிகாந்த் துணை நடிகர் ஒருவருக்கு பரிசாக கொடுத்துள்ளார். யார் அந்த நடிகர் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Aug 24, 2023, 11:43 AM IST
  • ஜெயிலர் படத்தில் ஜாபர் துணை கதாப்பாத்திரமாக நடித்திருப்பார்.
  • அவருக்கு ரஜினிகாந்த் ஒரு பரிசை கொடுத்துள்ளார்.
  • அது என்ன பரிசு தெரியுமா..?
‘ஜெயிலர்’ படத்தின் துணை நடிகருக்கு கிப்ட் கொடுத்த ரஜினி..! யார் அந்த நடிகர் தெரியுமா..?  title=

இம்மாதம் 10ஆம் தேதி வெளியாகி திரையரங்களுகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் படம், ஜெயிலர். ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் அவருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ஜாக்கி ஷ்ராஃப், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் முக்கிய கதாப்பாத்திரமாக ஜாபர் நடித்திருந்தார். 

ஜாபர் சாதிக்: 

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான ‘பாவக்கதைகள்’ படத்தின் ‘லவ் பண்ணா உட்றனும்’ படத்தில் நடித்து தமிழ் மக்களிடையே அறிமுகமானவர், ஜாபர் சாதிக். ஈரோடு மாவட்டத்தில் படித்து வளர்ந்து இவர் பல மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடியுள்ளார். அப்படித்தான் தமிழ் சினிமாவிற்குள்ளும் நுழைந்தார். கடந்த ஆண்டு வெளியாகியிருந்த ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு வலது கையாக வந்து மிரட்டியிருந்தார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜெயிலர் படத்திலும் ரஜினியுடன் கதை முழுவதும் பயணிக்கும் கதாப்பாத்திரங்களுள் ஒன்றாக நடித்துள்ளார். இவருக்குத்தான் ரஜினி தனது கூலிங் கிளாஸை பரிசாக கொடுத்துள்ளார். 

மேலும் படிக்க | சந்திரயான்-3 பட்ஜெட் இவ்வளவு தானா... ஆதிபுருஷ் படத்தை வம்பிழுக்கும் ரசிகர்கள்!

நன்றி தெரிவித்த நடிகர்:

ஜாபர், தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், ரஜினிகாந்த் தனக்கு கொடுத்த ஸ்பெஷல் பரிசு குறித்து பதிவிட்டுள்ளர். 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த மாதல் 4ஆம் தேதி தனக்கு இந்த கூலிங் கிளாசை ரஜினிகாந்த் பரிசாக கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளர். “நான் கேட்டேன்.,,அவரு கொடுத்தாரு..” என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ‘லக்கி மேன் நீங்க..’ என்று ஜாஃபருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

Jaffer

ஜெயிலர் படத்தில் நடிக்க வேறு பட வாய்ப்பை தட்டிக்கழித்த நடிகர்..

பாவக்கதைகள் படத்திற்கு பிறகு ஜாஃபரை தன் படத்தில் நடிக்க வைக்க தென்னிந்திய அளவில் இயக்குநர்கள் பலர் போட்டி போடுகின்றனர். இவருக்கு மலையாள திரையுலகின் பிரபல இயக்குநரான பிஜாய் நம்பியாரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அப்போது ஜெயிலர் படத்திலும் நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தால் அந்த படத்தில் நடிப்பதை விட்டுக்கொடுத்து விட்டார். அதற்கு ஏற்றார் போல ஜெயிலர் படத்தில் இவரது கதாப்பாத்திரத்திற்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. 

ஜெயிலர் பட நடிகர் நடிகைகள்..

ஜெயிலர் படத்தில் இந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். ஆனால் அவர்கள் அனைவருமே படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்திலேயே வந்திருந்தனர். இந்தி நடிகர் ஜாக்கி ஷ்ராஃப், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார், தமன்னா உள்ளிட்டோர் இதில் கேமியோ கதாப்பாத்திரத்தில் வந்தனர். படத்தின் வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடித்திருந்தார். இவரது கதாப்பாத்திரத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்தனர். 

ஜெயிலர் இரண்டாம் பாகம் இருக்கா..? 

ஜெயிலர் படம் வெளியான புதிதில் இப்படத்திற்கு இரண்டாம் பாகம் இருப்பதாக ஒரு தகவல் கிளம்பியது. இதில் நடிகர் விஜய்யை நடிக்க வைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை படக்குழு தரப்பில் இருந்து உறுதிப்படுத்தவில்லை. ரஜினிகாந்த், அடுத்து தனது 170வது படத்தில் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தாெடங்க இருக்கிறது. இதனை டிஜே ஞானவேல் இயக்குகிறார். 

மேலும் படிக்க | ‘கிங் ஆஃப் கோதா’ படம் எப்படியிருக்கு..? டிவிட்டர் விமர்சனம் இதோ..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News