கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படைத்தை இயக்கிய டி ஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தனது 39-வது படத்தில் நடித்துள்ளார். சூர்யா பிறந்தநாளன்று அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானது.
பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படை கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுஉள்ளது. இந்த படத்திற்கு ஜெய் பீம் (Jai Bhim) என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் (Actor Suriya) 2D என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
ALSO READ | Viral: தனது படத்தை மூக்கால் வரைந்த ரசிகரை பார்த்து அசந்து போன நடிகர் சூர்யா!
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் வரும் நவம்பர் மாதம் ஓ.டி.டியில் (OTT) வெளிவரும் என 2D என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
Equality is our birth right!!#JaiBhimOnPrime this November @PrimeVideoIN#Jyotika @tjgnan @prakashraaj @RSeanRoldan @srkathiir @KKadhirr_artdir @philoedit @rajisha_vijayan #Manikandan @jose_lijomol @PoornimaRamasw1 @rajsekarpandian@2D_ENTPVTLTD @proyuvraaj @SonyMusicSouth pic.twitter.com/dvL98EQwgb
— Suriya Sivakumar (@Suriya_offl) August 5, 2021
முன்னதாக நடிகர் சூர்யாவின் பிறந்த நாளன்று ஜெய் பீம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது. இது சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமின்றி பலரது பாராட்டினையும் பெற்றது. இக்கதை பழங்குடிப் பெண்ணுக்கு நேர்ந்த ஒரு உண்மைச் சம்பவம் என்று ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் பல மனிதநேய தீர்ப்புகளை வழங்கிய சென்னை முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவியும் எடுக்கப்படுவதாகவும் ஒரு செய்தி வெளி வருவது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Soorarai Pottru: இந்தியில் ரீமேக் ஆகிறது சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR