இருளர் இன மக்களின் வாழ்வியலையும், உண்மை சம்பவத்தையும் அடிப்படையாக வைத்து உருவான திரைப்படம் ஜெய்பீம். உலக அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இந்த திரைப்படத்தை சூர்யா, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்து, நடிக்கவும் செய்தார். இயக்குநர் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில், முன்னாள் நீதிபதி சந்துருவின் வாழ்வில் எதிர்கொண்ட உண்மைச் சம்பவம் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகாமல், நேரடியாக ஓடிடியில் வெளியாகி ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
கோவா உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு ஸ்பெஷல் விருதுகளையும், விமர்சனங்களையும் பெற்றுள்ள ஜெய்பீம், ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியல் ரேஸிலும் இடம்பிடித்துள்ளது. விரைவில் வெளியாக உள்ள ஆஸ்கர் விருது இறுதிப் பட்டியலில் ஜெய்பீம் படத்துக்கு இடம் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது என கூறப்படும் நிலையில், சூர்யா - ஜோதிகா தம்பதி உள்ளிட்ட ஜெய்பீம் படக்குழுவினர் அமெரிக்கா செல்ல உள்ளனர்.
மேலும்படிக்க | 'ஜெய் பீம்' படத்தில் ஏன் அக்னி கலச முத்திரையை வைக்க வேண்டும் - சீமான் கேள்வி
அமெரிகாகவில் ஆண்டுதோறும் வழக்கப்படும் குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர் விருது, சிறந்த திரைப்படத்துக்காக ’ஜெய்பீம்’ படத்துக்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருது விழாவுக்கான அழைப்பிதழ், விருது ஏற்பாட்டாளர்கள் சூர்யா, ஜோதிகா மற்றும் முன்னாள் நீதிபதி சந்துரு, படத்தின் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் அகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 11வது குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் வரும் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் சூர்யா உள்ளிட்டோர் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளனர். இதனால், இந்த விழாவில் பங்கேற்க சூர்யா - ஜோதிகாவுடன் படத்தின் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் உள்ளிட்டோர் இந்த வாரம் அமெரிக்க செல்லகின்றனர்.
மேலும் படிக்க | சிக்கிய சந்தானம்; எஸ்கேப் ஆன அன்புமணி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR