தமிழ் ராக்கர்ஸ்-ல் வெளியாகிறதா "தமிழ்படம் 2.0"!

தங்கள் படத்தில் மட்டும் அல்ல அறிவிப்பிலும் கிண்டலுக்கு பஞ்சம் இருக்காது என இப்படகுழு  நிறுபித்துள்ளது!

Last Updated : Dec 9, 2017, 10:17 AM IST
தமிழ் ராக்கர்ஸ்-ல் வெளியாகிறதா "தமிழ்படம் 2.0"! title=

நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில், அமுதன் இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் "தமிழ் படம்". 

தமிழ் திரைப்படங்களில் வழக்கமாக இடம்பெரும் காட்சிகளை சற்றே கிண்டால காண்பித்து ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம். இப்படம் வெளியாகி திரையுலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. 

இப்படத்தினை அறிமுக இயக்குனர் அமுதன் இயக்க, மிர்ச்சி சிவா, திஷா பாண்டே, எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடித்திருந்தனர். 

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை ("தமிழ்படம் 2.0") இப்படக்குழுவினர் இயக்கவுள்ளனர். முதல் பாகத்தை தயாரித்த சஷிகாந்த் 2-ம் பாகத்தையும் தயாரிக்கிறார். 

சிவா மற்றும் ஐஸ்வர்யா மேனன் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படபிடிப்புகள் வரும் டிச., 11 அன்று துவங்கவுள்ள நிலையில் தற்போது இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 25-ஆம் நாள் வெளியாகும் என தெரிவித்துள்ளது.

தங்கள் படத்தில் மட்டும் அல்ல அறிவிப்பிலும் கிண்டலுக்கு பஞ்சம் இருக்காது என நிறுபித்துள்ள இப்படகுழுவினர், வெளியீட்டு தேதி அறிவிப்பில் தமிழ் ராக்கர்ஸ்-ல் தங்கள் படம் எப்போது வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்!

Trending News