மிகவும் பிரபலமான ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டியை இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்ததில் இருந்து 'Succession' மற்றும் 'ஹவுஸ் ஆஃப் தி டிராகன்' போன்ற பிரீமியம் HBO தொடர்களை கொடுத்தது வரை, கடந்த மாதம் ஜியோ சினிமா ரசிகர்கள் மத்தியில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஆரம்பத்தில் ஆப்பில் சில கோளாறுகள் இருந்த போதிலும், அதனை சரி செய்து வெற்றியும் பெற்றுள்ளது. மே மாதத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட படங்கள் மற்றும் வெப் தொடர்கள் எத்தனை பார்வையாளர்களைக் சென்றடைந்தது என்பதைப் பார்ப்போம். மே மாதம் ஜியோ சினிமாவில் வெளியிடப்பட்ட பிரபலமான படங்களை அவற்றின் 'ஹிட்', 'மிஸ்' அல்லது 'சூப்பர்-ஹிட்' நிலைகளுடன் தொகுத்துள்ளோம். 'ஹிட்' என்பது அதிக பார்வையாளர்களை சென்றடைந்ததை குறிக்கிறது, 'மிஸ்' என்பது குறிப்பிடத்தக்க பார்வையாளர்களிடம் சென்றடையவில்லை, மேலும் 'சூப்பர்-ஹிட்' என்பது ஜியோ சினிமாவின் வெற்றிகரமான படம் அல்லது வெப் தொடரை குறிக்கிறது.
மேலும் படிக்க | தமன்னாவிற்கு ஜெயிலர் ஷூட்டிங்கில் ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்...என்ன தெரியுமா?
ஐபிஎல் 2023 (விளையாட்டு) – சூப்பர்ஹிட்
பூ (திரைப்படம், நேரடியாக OTT) – மிஸ்
சித்ரகுட் (திரைப்படம்) – மிஸ்
பேடியா (திரைப்படம்) – சூப்பர்ஹிட்
கிராக் டவுன் சீசன்-2 (வெப் சீரிஸ்) – ஹிட்
மீ வசந்தராவ் (திரைப்படம்) – மிஸ்
தக்ஸ் (திரைப்படம்) – மிஸ்
லவ் யூ அபி (வெப் சீரிஸ்) – மிஸ்
கச்சே லிம்பு (திரைப்படம், நேரடியாக OTT) – ஹிட்
இன்ஸ்பெக்டர் அவினாஷ் (வெப் சீரிஸ்) – ஹிட்
விக்ரம் வேதா (திரைப்படம்) – சூப்பர்ஹிட்
உரிமம் பெற்ற திரைப்படங்கள்
மே 2023ல், ஹிருத்திக் ரோஷன் & சைஃப் அலி கான் நடித்த 'விக்ரம் வேதா' மற்றும் வருண் தவான் நடித்த 'பேடியா' என்ற ஓநாய் நகைச்சுவை படம் ஆகிய இரண்டு பெரிய படங்கள் ஜியோ சினிமாவில் வெளியானது. இந்த இரண்டு படங்களும் பார்வையாளர்களிடையே உடனடி வெற்றியைப் பெற்றன. மேலும் ஜியோ சினிமா இந்த 2 படங்களை இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்தனர். இருப்பினும், 'சித்ரகுட்' மற்றும் 'மீ வசந்த்ராவ்' போன்ற வேறு சில திரைப்படங்கள் நல்ல விமர்சனங்கள் இருந்தபோதிலும் OTT பார்வையாளர்களை அதிக எண்ணிக்கையில் ஈர்க்கத் தவறிவிட்டன.
இணையத் தொடர்
வெப் சீரிஸ் முன்னணியில், ஜியோ சினிமாவிற்கு மே மாதம் நல்லதாக இருந்தது ஆனால் அதன் உரிமம் பெற்ற படங்களின் போர்ட்ஃபோலியோவைப் போல உற்சாகமாக இல்லை. 'கிராக் டவுன் சீசன்-2' பார்வையாளர்களிடமிருந்து நல்ல கருத்துக்களைப் பெற முடிந்தது. மறுபுறம், 'லவ் யூ அபி' தேவையான சலசலப்பையும் தாக்கத்தையும் உருவாக்கத் தவறிவிட்டது. மேலும் ரன்தீப் ஹூடாவின் போலீஸ் ஆக்ஷனரான 'இன்ஸ்பெக்டர் அவினாஷ்' விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களுடன் ஓரளவு கலவையைப் பெற்றது.
நேரடியாக OTT திரைப்படங்கள் / விளையாட்டு
நேரடியாக OTT இருமொழி திகில் திரைப்படமான 'பூ' பார்வையாளர்களைக் கவரவில்லை, மோசமான கருத்துகளின் காரணமாக பார்வையாளர்களை சென்றடையவில்லை. இருப்பினும், ராதிகா மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மற்றொரு OTT திரைப்படமான 'கச்சே லிம்பு' பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டது. இந்த திரைப்படம் ரசிகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களையும், நல்ல கருத்துக்களையும் பெற்றது. மேலும், ஆச்சரியப்படத்தக்க வகையில், ஜியோ சினிமாவில் மே மாதத்தில் நம்பமுடியாத பயனர் தளத்தைக் கொண்ட விளையாட்டு நிகழ்வு ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டியாகும். குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியில், ஜியோ சினிமா 3.3 கோடி நேரடி பார்வையாளர்களை பதிவு செய்தது. ஒட்டுமொத்தமாக, மே 2023க்கு ஜியோ சினிமாவுக்கு மூன்று 'ஹிட்கள்', ஐந்து 'மிஸ்கள்' மற்றும் மூன்று 'சூப்பர்-ஹிட்' படங்கள் இருந்தன.
மேலும் படிக்க | கடுப்பான லோகேஷ் கனகராஜ்! சமாதானம் செய்வாரா விஜய்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ