தமிழ் திரையுலகத்தை பொருத்தவரை, அனைத்து தலைமுறை நடிகர்களிடமும் ஏதாவது ஒரு போட்டி நிலவி வருகிறது. இது எம்.ஜி.ஆர்-சிவாஜி கணேசன் காலத்தில் ஆரம்பித்து சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதி வரை தொடர்ந்து வருகிறது. திரையுலகில் நடிகர்களுக்கிடையே போட்டி நிலவுமே தவிர, அவர்களுக்குள் தனிப்பட்ட மனஸ்தாபகங்களோ பகையோ இருக்காது. ரசிகர்களின் “உனக்கு பிடித்த நடிகர் பெரியவரா, எனக்கு பிடித்த நடிகர் பெரியவரா..” என்ற போட்டியே இவர்களை எதிரிகள் போல வெளியுலகில் காண்பிக்கிறது. ஆனாலும் இவர்கள் உண்மையிலேயே நண்பர்களா இல்லையா என்ற சந்தேகம் மட்டும் ரசிகர்களுக்கு தீருவதில்லை. இன்று உலக நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திரையுலகில் எதிரி நடிகர்களாக பார்க்கப்படுபவர்களையும் அவர்கள் உண்மையில் நண்பர்களா அல்லது எதிரிகளா என்பதையும் பார்க்கலாம்.
எம்.ஜி.ஆர்-சிவாஜி கணேசன்:
40-70களில் டாப் ஹீீரோக்களாக இருந்தவர்கள், எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன். ஒரு பக்கம் நடிகர் எம்.ஜி.ஆர், தனது அரசியல் கருத்துகளை பிரதிபலிக்கும வகையிலான கதைகளை தேர்ந்தெடுத்து ஊருக்கு உபதேசம் செய்வது போன்ற படங்களில் நடிக்க, சிவாஜி கணேசன் குடும்பக்கதையாக தேர்ந்தெடுத்து நடித்தார். இப்போது இருக்கும் ஹீரோக்களை பற்றி இணையதளத்திலும் நாளிதழ்களிலும் ஊடகத்தளங்களிலும் செய்திகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் அப்போது அப்படி இல்லை. டாப் ஹீரோக்கள் என்ற காரணத்திற்காக மட்டும் எம்.ஜி.ஆர்-சிவாஜி ஆகிய இருவரும் எதிரிகளாக பார்க்கப்பட்டவில்லை. இவர்கள் இருவரும் வெவ்வேறு வகையிலான அரசியல் அணுகுமுறைகளை கொண்டிருந்தனர். இதுவே இவர்கள் எதிரிகளாக பார்க்கப்பட காரணமாக இருந்தது. ஆனால் திரைக்கு பின்னரும் சரி, தனிப்பட்ட வாழ்விலும் சரி இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகவே வாழ்ந்தனர்.
மேலும் படிக்க | ரஜினிகாந்திற்கு வில்லனாகும் பகத் பாசில்..! அதுவும் இந்த இயக்குநரின் படத்திலா..!
ரஜினி-கமல்:
எம்.ஜி.ஆர்-சிவஜிக்கு பிறகு ரசிகர்களை அதிகம் ஈர்த்தவர்கள், கமல் மற்றும் ரஜினிதான். கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னர் தொடர்ந்த இவர்களின் சினிமா போட்டி இன்றும் தொடர்ந்து வருகிறது. ரஜினியின் இயல்பான சுபாவமும் பேச்சும் அவரது ரசிகர்களுக்கு பிடிக்க, கமலின் அறிவார்ந்த சிந்தனையும் தெளிவான பேச்சும் பலரை ஈர்த்தது. இருவரும் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகளும் வித்தியாசமானவையாகவே இருந்தது. இவர்களுக்குள் தனிப்பட்ட பகை, பொறாமை என எதுவும் இருப்பதாக அவர்கள் இதுவரை குறிப்பிட்டதில்லை. ஆனால் இவர்களது ரசிகர்களோ ஒவ்வொரு முறை இவர்களின் படங்கள் வெளிவரும் போதும் ஏதாவதொரு பஞ்சாயத்தை இழுத்துவிடுவர். சமீப காலங்களில், ரஜினி-கமல் இருவருமே பொதுவாக ஏதேனும் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, நட்பு பாராட்டுவது போன்ற செய்கைகளை வாடிக்கையாகி வருகிறது.
விஜய்-அஜித்:
இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போரில் கூட அவ்வளவு வெறுப்பை உமிழ மாட்டார்கள், ஆனால் விஜய்யா-அஜித்தா என்ற போட்டி வந்துவிட்டால் போதும், எந்த கமெண்ட் செக்ஷனையும் திறக்கவே முடியாது. அந்த அளவிற்கு இவர்களது ரசிகர்கள் அடித்துக்கொள்வர். விஜய் படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் அஜித் ரசிகர்கள் விஜய்யின் ரசிகர்களை கேலி செய்வதும், விஜய் ரசிகர்கள் அதை அப்படியே அஜித் ரசிகர்களுக்கு ரிபீட் செய்வதும் பலருக்கும் பார்த்து பழகி விட்டது. ஆனால் ரசிகர்களின் சண்டைகளுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமே இல்லை. அடிப்படையில் இருவரும் நல்ல நண்பர்கள் என்பதே உண்மை.
தனுஷ்-சிம்பு:
தமிழ் சினிமாவின் திறமை மிகு நடிகர்கள் பட்டியலில் தனுஷ்-சிம்பு ஆகியோரும் நல்ல இடத்தை பிடித்துள்ளனர். நடனம், பாடல் எழுதுவது, பாடுவது, படத்தை இயக்குவது என சரி சமமாக இருவரும் பல்வேறு திறமைகளை கொண்டுள்ளனர். பகையாளிகளாக ரசிகர்கள் இவர்கள் இருவரையும் கருதினாலும், இவர்களுக்குள் இருக்கும் நட்பு குறித்தும் சிலர் அறிவர். ஒன்றாக பட விழாக்களில் கலந்து கொள்வது, ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பது ஒன்றாக பார்டிகளில் கலந்து கொள்வது என இருவருமே அவ்வப்போது தங்களின் நட்பினை வளர்த்துக்கொள்கின்றனர்.
விஜய் சேதுபதி-சிவகார்த்திகேயன்:
எம்.ஜி.ஆர், ரஜினி, கமல், விஜய், அஜித் போல இவர்களுக்கு பெரிய ரசிகர் கூட்டம் கிடையாது. ஆனாலும் அடுத்து தமிழ் திரையுலகை ஆளப்போகும் நடிகர்களுள் இவர்கள் இருவரும் முக்கிய பங்கு வகிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி-சிவகார்த்திகேயன் ஆகிய இருவருமே கடின உழைப்பு மூலம் மேலே வந்தவர்கள். இவர்களின் ரசிகர்களும் இருவருக்கும் இடையே போட்டி இருப்பதாக கருதினாலும், இவருமே திரைக்கு முன்னாலும் பின்னாலும் நல்ல நண்பர்களே. சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திற்காக சம்பளம் கூட வாங்காமல் விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ