இந்திரஜித் நவம்பர் 24-ல் ரிலீஸ்

'ஹர ஹர மஹாதேவகி' படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் 'இந்திரஜித்'. 

Last Updated : Nov 12, 2017, 10:31 AM IST
இந்திரஜித் நவம்பர் 24-ல் ரிலீஸ் title=

'ஹர ஹர மஹாதேவகி' படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் 'இந்திரஜித்'. 

'உதயம் NH4' படத்தில் நடித்த அஷ்ரிதா ஷெட்டி கதாநாயகியாக மீண்டும் தமிழில் களமிரங்குகிறார். தாணுவின் 'வி கிரியேசன்ஸ்' நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. 

'சக்கரகட்டி' படத்தை இயக்கிய கலாபிரபு இப்படத்தை இயக்குகிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு தேவி ஶ்ரீ பிரசாத்திடம் உதவி இசையமைப்பாளராக இருந்த கிருஷ்ண பிரசாத் முதன்முறையாக இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் தற்போது இப்படம் வரும் நவம்பர் 24-ம் தேதி திரைக்கு வர காத்திருக்கிறது. 

Trending News