விண்வெளி அறிவியல் குறித்து வெளியான இந்திய படங்கள்: டாப் லிஸ்டில் தமிழ் படம்!

சந்திரயான் 3 இன்று நிலவில் தரையிரங்குகிறது. இதையடுத்து, இந்திய சினிமாவில் விண்வெளி குறித்து எடுக்கப்பட்ட படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Aug 23, 2023, 11:23 AM IST
  • சந்திரயான் 3 விண்கலம் இன்று நிலாவில் தரையிரங்க உள்ளது.
  • விண்வெளி குறித்து இந்திய சினிமாவில் பல படங்கள் வெளியாகியுள்ளன.
  • இதில் தமிழ் படம் ஒன்று டாப் லிஸ்டில் உள்ளது.
விண்வெளி அறிவியல் குறித்து வெளியான இந்திய படங்கள்: டாப் லிஸ்டில் தமிழ் படம்! title=

சந்திரயான் 3 இன்று நிலாவில் தரையிரங்க உள்ளது. சரியாக 6:04 மணிக்கு தரையிரங்க இருக்கும் சந்திரயான் 3 நிகழ்வை பலர் தங்களது குடும்பத்தினருடன் நேரலையாக பார்க்க அரவமுடன் காத்துக்கொண்டுள்ளனர். விண்வெளி ஆய்வு குறித்தும் அதன் சாதனைகள் குறித்தும் இந்திய சினிமாவில் பல படங்கள் வெளிவந்துள்ளன. கருப்பு மற்றும் வெள்ளை திரைப்பட காலத்தில் இருந்தே விண்வெளிகள் குறித்த படம் எடுக்கப்பட்டுள்ளது. அவை என்னென்ன படங்கள், அதிலிருந்து என்னென்ன கற்றுக்கொள்ளலாம்? இங்கே தெரிந்து கொள்வோம் வாங்க. 

கலை அரசி: 

தமிழ் இயக்குநர் ஏ.காசிலிங்கம் என்பவர்தான் இந்தியாவின் முதல் விண்வெளி படத்தை இயக்கியுள்ளார். ‘கலை அரசி’ என்ற அந்த படம், 1963ஆம் ஆண்டு வெளியானது. இதில், எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். இவருடன் பி.பானுமதி ராமகிருஷ்ணா நடித்திருந்தார். படம் வெற்றி பெற்றிருந்தாலும் அப்போதைய மக்களுக்கு விண்வெளி குறித்த போதிய அறிவு இல்லாததால் படம் மக்களை பெரிதாக ஈர்க்கவில்லை. படத்திற்கு மக்கள் பெரிதாக வரவேற்பு கொடுக்காததால் அதன் பிறகு தயாரிப்பாளர்கள் யாரும் விண்வெளி குறித்த படங்களை இயக்க முன்வரவில்லை. 

மேலும் படிக்க | லிஸ்ட்டு பெருசா போய்கிட்டே இருக்கு.. லியோ படத்தில் இவருமா?

சாந்த் பர் சாத்யே:

1967ஆம் ஆண்டு டி.பி சுந்தரம், தாரா சிங் ஆகியோர் இணைந்து விண்வெளி குறித்த ஒரு படத்தை தயாரித்திருந்தனர். டி.பி சுந்தரம், இந்த படத்தை இயக்கி தயாரித்திருந்தார். ஆனால், இந்த படம் வெளிவந்ததே பெரிதாக வெளியில் தெரியாமல் போனது. தற்போதும் கூட இந்த படம் குறித்த தகவல்கள் மிகவும் குறைவாகவே இணையதளங்களில் உள்ளன. 

கோய் மில் கயா:

ரித்திக் ரோஷன், பிரீத்தி ஜிந்தா, ரேக்கா, பிரேம் சோப்ரா ஆகியோர் நடித்திருந்த படம், கோய் மில் கயா. இப்படம் 2003ஆம் ஆண்டில் வெளியாந்து. இதில், வேற்று கிரக வாசிகள் குறித்து காண்பிக்கப்பட்டிருக்கும். படம் வெளியான போது இது வெறும் ஃபேண்டசியாக பார்க்கப்பட்டது. நாளாக நாளாக, படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்க உதவியது. 

அண்டாரிக்‌ஷம் 9000 KMPH:

தெலுங்கு திரையுலகில் முதன் முதலாக வெளிவந்த விண்வெளி படம், அண்டாரிக்‌ஷம்.  2018ஆம் ஆண்டு வெளியான இந்த படம் அறிவியலை தாண்டி சிறிதளவு டிராமா கலந்திருப்பது போல தென்பட்டது. ஆனாலும் படக்குழு ஒரு சிறந்த கதையை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் பெரிதளவில் முயற்சி எடுத்து இந்த படத்தை இயக்கி இருந்தனர். ஆனாலும் இப்படம் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. 

டிக் டிக் டிக்:

2018ஆம் ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான தமிழ் படம் டிக் டிக் டிக். இதில், விண்வெளி குறித்த விஷயங்களை கொஞ்சம் மிகையாகவே காண்பித்துள்ளதக கூறப்பட்டது. பல இடங்களில் இடம் பெற்றிருந்த கிராஃபிக்ஸ், மனதில் ஒட்டவில்லை என்று ரசிகர்கள் மத்தியில் இருந்து விமர்சனம் எழுந்தது. படம், பாக்ஸ் ஆபிஸில் ஓரளவு நல்ல வசூலை பெற்றது. 

மிஷன் மங்கள்:

இதுவரை வெளிவந்த இந்திய விண்வெளி படங்களிலேயே அதிக வசூல் பெற்ற படம், மிஷன் மங்கள். இதில் அக்‌ஷ்ய் குமார், வித்யா பாலன் ஆகியோர் நடித்திருந்தனர். தாப்சி, கிருத்தி குல்ஹாரி, சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தனர். 

ராகெட்டரி: தி நம்பி எஃபெக்ட்:

பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ராக்கெட்டரி. இதில், நம்பி நாராயணனின் கதாப்பாத்திரத்தில் மாதவன் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதில் நடிகர்கள் சூர்யா மற்றும் ஷாருக்கான் ஆகியோர் கௌரவ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். 

மேலும் படிக்க | “ரஜினிக்கே 6 படங்கள் தோல்விதான்..” சர்ச்சையில் மாட்டிக்கொண்ட விஜய் தேவரகொண்டா..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News