வலிமை படத்தில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வலிமை திரைப்படம் நேற்று வெளியானது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 25, 2022, 12:22 PM IST
  • வினோத் - அஜித் கூட்டணியில் உருவான இரண்டாவது படம்.
  • ஹாலிவுட் தரத்தில் ஸ்டண்ட் காட்சிகள்.
  • எடிட்டிங் மற்றும் கேமரா சிறப்பாக அமைந்தது.
வலிமை படத்தில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய முக்கிய விஷயங்கள்! title=

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் நேற்று திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் வலிமை.  கடைசியாக 2019ம் ஆண்டு வெளியான விஸ்வாசம் படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.  படம் வெளியாவதற்கு முன்பே க்லிம்சி மற்றும் ட்ரைலரில் இடம் பெற்ற பைக் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிக எதிர்பார்ப்பை பெற்றன.  தற்போது படத்திற்கு பலதரப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும், வலிமை படத்தில் பேச வேண்டிய முக்கிய விஷயங்கள்.  இனி பைக் சேசிங் வைத்து வரும் படங்களுக்கு முன்னுதாரணமாக இப்படம் அமைந்துள்ளது.

valimai

மேலும் படிக்க | வலிமை திரைப்படத்துக்கு ரசிகர்களின் டிவிட்டர் ரியாக்ஷன்..!

வலிமை படம் வெளியாவதற்கு முன்பு வரை அனைவராலும் அதிகம் பேசப்பட்டது படத்தில் இடம்பெற்ற பைக் ஸ்டண்ட் காட்சிகள்.  ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இப்படத்திலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.  வெறும் சேசிங் சீனாக மட்டும் இல்லாமல், இதற்காகவே தனியாக திரைக்கதை எழுதியுள்ளார் வினோத்.  அது படத்திலும் வெளிப்பட்டுள்ளது.  வெளிநாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் இங்கு நடைபெறுவது போல மாற்ற பட்டாலும் படமாக பார்க்கும் போது பெரிதாக உறுத்தவில்லை.  

valimai

பொதுவாக மாஸ் ஹீரோ படங்களில் சண்டை காட்சிகள் படு மாஸாக இருக்கும்.  அந்த வகையில் வலிமை படத்திலும் சண்டை காட்சிகள் தாறுமாறாக உள்ளன.  படத்தின் ஆரம்பத்தில் வரும் சண்டை முதல் படம் முழுவதும் இடம் பெரும் சண்டை காட்சிகள் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளன.  படத்தில் பாதி நேரம் சேசிங் மற்றும் சண்டை காட்சிகளை மட்டுமே வைத்து கொன்டு சென்றுள்ளனர்.  முடிந்தவரை இது சலிப்பை ஏற்படுத்தாமல் இருந்தது, அந்த வகையில் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் அவர்களை பாராட்டியே ஆகா வேண்டும்.

valimai

அஜித் மற்றும் வில்லன் கார்த்திகேயா இருவரும் பைக்கில் மோதி கொள்ளும் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன.  படத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாலும் அது பார்ப்பவர்களுக்கும் அந்த உணர்வை தருகிறது.  அந்த வகையில் கேமரா மேன் நீரவ் ஷா மற்றும் விஜய் வேல்குட்டி வெகுசிறப்பாக தங்களது வேலைகளை செய்துள்ளனர். பொதுவாக வினோத் படங்களில் காட்சி அமைப்புகள் பார்ப்பவர்களை சீட் நுனியில் கொண்டு செல்லும்.  வலிமை படத்திலும் அஜித் இன்வெஸ்டிகேஷன் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.  ஒரு சூசைடில் தொடங்கி வில்லனை எப்படி பிடிக்கிறார் என்பது சுவாரஸ்யமாக அமைந்தது.  

மேலும் படிக்க | வலிமை படம் ரிலீஸ்...! திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு...!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News