வரும் காலத்தில் ஏதாவது ஒரு படத்திலாவது திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் "தர்பார்" . இந்த திரைப்படதிதல் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். ரஜினி நீண்ட இடைவெளிக்குப் பின் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பிரமாண்ட படத்தை லைகா புரொடக்சன் தயாரிகிறது.
ஏற்கனவே "தர்பார்" படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ரஜினிகாந்த் காவலராக நடித்துள்ள இப்படத்தில் ரஜினி ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் ட்ரெய்லரை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ஒரே படக்குழு வெளியிட்டு பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தற்போது தமிழ் மட்டும் இன்றி இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள தர்பார் படத்தின் மூன்று டிரைலர்கள் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொள்ள, சிறப்பு விருந்தினர்களாக ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துக் கொண்டார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், தர்பார் படத்தில் போலீசாக நான் நடிக்க காரணம் ஏ.ஆர். முருகதாஸ் தான். எனக்கு போலீஸ் வேடத்தில் நடிக்கவே பிடிக்காது. எல்லோரும் ஸ்டைல் ஸ்டைல் என்கிறார்கள், என்னிடம் எதை அவர்கள் ஸ்டைல் என்கிறார்கள் எனத் தெரியவில்லை.
தர்பாரில் இருக்கும் ஆதித்யா அருணாச்சலம் கதாபாத்திரம் சோகமான கதாபாத்திரம், மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியனை விட சிறப்பானதாக இருக்கும். வரும் காலத்தில் ஏதாவது ஒரு படத்திலாவது திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்று தெரிவித்தார்.