பிக்பாஸில் ’ஹிப்ஹாப் ஆதி’ - போட்டியாளர்கள் மகிழ்ச்சி

’அன்பறிவு’ படத்தின் புரோமோஷனுக்காக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற ஆதி, சுவாரஸ்யமாக எலிமினேஷனில் இருந்து பிரியங்காவை காப்பாற்றியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 19, 2021, 01:39 PM IST
பிக்பாஸில் ’ஹிப்ஹாப் ஆதி’ - போட்டியாளர்கள் மகிழ்ச்சி title=

ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள திரைப்படம் ’அன்பறிவு’ (ANBARIVU). அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அஸ்வின் ராம் இந்தப் படத்தை இயக்கி, தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் திரைக்கதையை எழுதிய ஹிப்ஹாப் ஆதி(HIP HOP Aadhi)  , அவரே திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆதிக்கு ஜோடியாக காஷ்மிரா நடித்துள்ளார். ஹீரோவின் தாத்தா ரோலில் முன்னணி நடிகர் நெப்போலியன் நடித்துள்ளார். இவர்களுடன் ஊர்வசி, சங்கீதா, தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ALSO READ | ஹிப்ஹாப் தமிழா நடித்துள்ள அன்பறிவு டிரெய்லர் வெளியானது

டூயல் ரோலில் ஹிப்ஹாப் ஆதி நடித்திருக்கும் இந்த திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஜனவரி 7 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் புரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக பிக்பாஸ் (BIGBOSS TAMIL ) நிகழ்ச்சிக்கு நடிகர் ஆதி உள்ளிட்ட படக்குழுவினர் சென்றுள்ளனர். வீட்டிற்குள் செல்லவில்லை.

கமல்ஹாசனுடன் இருக்கும் அவர்கள் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுடன் உரையாடியுள்ளனர். அப்போது, அன்பறிவு டீம்முக்கு ஒரு டாஸ்க் கொடுக்கும் கமல், வீட்டில் இருக்கும் ஒருவரை காப்பாற்றுமாறு கூறுகிறார். கையில் ரெடியாக மைக் வைத்திருக்கும் ஆதி, வீட்டில் இரண்டு பேரை மட்டுமே தனக்கு தெரியும் என்றும், அதில் ஒருவரை காப்பாற்றுகிறேன் எனக் க்ளூ கொடுக்கிறார். அவர் இந்தக் க்ளு கொடுத்த உடனே பிரியங்கா எழுகிறார். பிரியங்கா நீங்க இந்த வார எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுகிறீர்கள் என ஆதி அறிவிக்கிறார். இதனால் மகிழ்ச்சியடையும் பிரியங்கா ஆதிக்கு நன்றி சொல்கிறார்.

ALSO READ  | திசைமாறும் ஜல்லிக்கட்டு போராட்டம்: ஹிப் ஹாப் ஆதி

இந்தப் புரோமோவை பிக்பாஸ் டீம் வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த வாரம் அபிநய் வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் கசிந்தாலும், யார் எலிமினேஷன் என்பதை டிவியில் பார்க்க மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News