Viral Photo: சமூக வலைதளத்தை கலக்கும் கீர்த்தி சுரேஷ்-ன் வைரல் புகைப்படம்!

4-வது குஞ்சலி மரைக்காரரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் சரித்திர படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

Last Updated : Mar 4, 2020, 03:10 PM IST
Viral Photo: சமூக வலைதளத்தை கலக்கும் கீர்த்தி சுரேஷ்-ன் வைரல் புகைப்படம்! title=

4-வது குஞ்சலி மரைக்காரரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் சரித்திர படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்கார். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்கார் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற படம் தயாராகிறது. இதில் குஞ்சலி மரைக்கார் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். 

இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை மார்ச் மாதம் 26-ஆம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் திரைக்கு கொண்டுப்படுகிறது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh), மஞ்சு வாரியர், அர்ஜுன், சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் பாரம்பரிய உடையுடன் இருக்கும் கீர்த்தி சுரேஷின் (Keerthy Suresh) புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Trending News