தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். 2001ம் ஆண்டு வெளியான 'மின்னலே' படத்தின் மூலம் இவர் திரைத்துறைக்குள் நுழைந்தார். தனது திறமையால் பல பிலிம்பேர் விருதுகளை இவர் வென்று குவித்து இருக்கிறார். தற்போது இவர் முதன் முறையாக சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிக்கும் படத்தில் இசையமைக்கப்போவதாக செய்திகள் கூறப்படுகிறது.
ALSO READ | டோலிவுட் செல்லும் 'டாக்டர்' புகழ் ரெடின் கிங்ஸ்லி!
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படமொன்றில் கதாநாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிக்பாஸ் சீசன்-5ன் ஃபைனல்ஸில் இப்படக்குழு நிகழ்ச்சியில் பங்கேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஃபிலிம் இந்தியா இணைந்து தயாரிக்க உள்ளது. 'டாக்டர்' பட வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு மவுசு கூடிய நிலையில் இப்படம் ரசிகர்களின் பூர்த்தி செய்யும் விதத்தில் அமையும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிக்க போகும் மற்ற நடிகர்கள் குறித்த உண்மையான விவரங்கள் வெளிவராத நிலையில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கப்போவதாகவும் தகவல்கள் கசிந்து இருக்கிறது. இதுவரை சிவகார்த்திகேயன்-அனிருத் கூட்டணியில் அதிக பாடல்களை கேட்ட ரசிகர்களுக்கு இந்த புதிய கூட்டணி அமைந்தால் ரசிகர்களுக்கு இது புதுவித அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல இமான் இசையிலும் வெளியான சிவகார்த்திகேயன் படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதேபோல சிவகார்த்திகேயன் முதல்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'அயலான்' படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR