தெலுங்கு சினிமாவில் கால்பதிக்கும் ஹரி! மாஸ் ஹீரோவுடன் புதிய படம்!

ஹரி இயக்கத்தில் தெலுங்கு திரையுலக ஆக்ஷன் ஹீரோ கோபிசந்த் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 8, 2022, 05:59 PM IST
  • ஹரி இயக்கத்தில் யானை படம் வெளியாக உள்ளது.
  • அடுத்தாக தெலுங்கு ஹீரோவை வைத்து இயக்க உள்ளார்.
  • இதற்காக கோபிசந்திடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
தெலுங்கு சினிமாவில் கால்பதிக்கும் ஹரி! மாஸ் ஹீரோவுடன் புதிய படம்! title=

இயக்குனர் ஹரியை தமிழ் திரையுலகில் தெரியாத நபர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை, அதிரடியான போலிஸ் கதையம்சம் கொண்ட திரைப்படங்களுக்கென்றே பெயர் போனவர் இவர்.  இயக்குனர் ஹரி தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது, தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் நன்கு பரிட்சயமானவர்.  இவரது படங்கள் பல தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தெலுங்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது, உதாரணமாக சூர்யாவின் 'ஆறு', 'சிங்கம்' மற்றும் விஷால் நடிப்பில் வெளியான 'பூஜை' போன்ற படங்கள் அதிக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.  விக்ரமை வைத்து இவர் இயக்கிய 'சாமி' படம் தெலுங்கில் 'லட்சுமி நரசிம்மா' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது, இதில் கதாநாயகனாக நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்திருந்தார். 

hari

மேலும் படிக்க | பனிப்பிரதேசத்தில் வாழும் டைனோசர்கள்.! ஜூன்-10ல் ரிலீஸாகிறது ‘ஜூராஸிக் வேர்ல்டு: டொமினியன்’

சில தெலுங்கு படங்களின் ப்ரோமோஷன்களில் இவர் கலந்துகொண்ட போதெல்லாம் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் தெலுங்கில் எப்போது படம் பண்ண போகிறீர்கள் என்கிற கேள்வியையே எழுப்பி வந்தனர்.  மேலும் இவர் தெலுங்கில் நேரடியாக படத்தை இயக்கினால் நிச்சயம் ஜுனியர் என்டிஆரை வைத்து தான் படம் இயக்குவார் என்றும், மற்ற நடிகர்களை வைத்து முதலில் படத்தை இயக்கமாட்டார் என்கிற சில தவறான வதந்திகள் பரவி வந்தது.  ஜூனியர் என்.டி.ஆருடன் பணியாற்றாதது குறித்து ஒரு பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பலமுறை கேள்வி கேட்கப்பட்டதால் இயக்குனர் ஹரி கோபமடைந்ததாக சில செய்திகள் முன்னர் வெளியானது.  

gopi

இந்நிலையில் இயக்குனர் ஹரி தெலுங்கு திரையுலகின் ஆக்ஷன் ஹீரோவாக விளங்கும் கோபிச்சந்தை வைத்து புதிய படமொன்றை விரைவில் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  கிராமத்து பின்னணியில் உருவாக்க இருக்கும் இப்படத்தின் கதை நடிகர் கோபிசந்திற்கு பிடித்துவிட்டதாகவும் விரைவில் இப்படத்திற்கான பணிகளை தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.  கோபிசந்த் நடிப்பில் வெளியான  'லௌக்கியம்' படம் சிறப்பான வெற்றியை  பெற்றது, அதனையடுத்து 'பக்கா கமர்ஷியல்' படம் வெளியாகவுள்ளது.  மேலும் அடுத்ததாக இயக்குனர் ஸ்ரீவாஸுடன் 'லக்ஷ்யம் -2' படத்தில் நடித்து வருகிறார்.  அதேபோல தமிழில் நடிகர் அருண் விஜய்யை வைத்து இயக்குனர் ஹரி இயக்கியுள்ள யானை படம் மே -6ம் தேதி வெளியாகவுள்ளது.

மேலும் படிக்க | விக்ரம் பிரபுவின் டாணாக்காரன் - திரை விமர்சனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News