தமிழில் நடக்க உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 வில் டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து இடம்பெறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மற்ற மொழிகளை போலவே தமிழிலும் மிகவும் பிரபலம் பெற்ற ஒரு நிகழ்ச்சி. இதுவரை வெளிவந்த 4 சீசன்களும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த நான்கு சீசன் களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். விரைவில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்கும் என்று தகவல்கள் வந்துக் கொண்டிருக்கிறது.
கொரோனா 2-ம் அலையின் காரணமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக்பாஸ் 5 நிகழ்ச்சி செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் பட்டியல் முன்கூட்டியே இணையத்தில் வெளியாகி விடும். இதனிடையே பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் குக் வித் கோமாளி கனி, சுனிதா, பாபா பாஸ்கர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் விஜய், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தி வாசிப்பாளர் கண்மணி, எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், டிக்டாக் ஜி.பி.முத்து மற்றும் ஷகீலாவின் மகள் மிகா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. விரைவில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்தாவது சீசனுக்கான வேலைகள் பரபரப்பாக போரூரில் நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த மாதம் இங்கு கொரோனா விதிமுறைகளை மீறி பிக்பாஸ் மலையாளம் நிகழ்ச்சி நடைபெற்றதால் மாநகராட்சி அதிகாரிகள் இந்த இடத்திற்கு சீல் வைத்தனர்.
சமூகவலைதளத்தின் மூலம் பிரபலமான ஜி.பி.முத்துவின் செத்தப்பயலே நாரப்பயலே வசனங்கள் பலரால் கொண்டாடப்படுகிறது. தற்போது பிக்பாஸ் சீசன் 5ல் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் உத்தேச பட்டியலில் ஜிபி முத்துவின் பெயர் உள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தும் தனியார் தொலைக்காட்சி ஜிபி முத்துவின் வசனத்தை அதன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளது. இதன் மூலம் பிக் பாஸ் சீசன் 2 ஜிபி முத்து இருப்பது உறுதியாகியுள்ளது.
மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஜி.பி.முத்து ஏற்கனவே கடை திறப்புக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகிறார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுகிறார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR