கருடன் படத்தின் ட்ரைலர் வெளியீடு, கோடிகளில் சூரியின் சம்பளம்

கருடன் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சூரி. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில், அதனுடன் நடிகர் சூரியின் சம்பள விவரமும் வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 21, 2024, 03:15 PM IST
  • கருடன் படத்திற்காக சூரி வாங்கியுள்ள சம்பளம்.
  • ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • மிரட்டலுமாக முழு ட்ரைலரிலும் கவனம் பெறுகிறார் சூரி.
கருடன் படத்தின் ட்ரைலர் வெளியீடு, கோடிகளில் சூரியின் சம்பளம் title=

கருடன் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சூரி. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில், அதனுடன் நடிகர் சூரியின் சம்பள விவரமும் வெளியாகியுள்ளது. அதன்படி கருடன் படத்திற்கு சூரி வாங்கியுள்ள சம்பளம் குறித்து வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது தொடர்பான முழு விவரத்தை இந்த கட்டுரையில் காணபோம்.

நடிகர் சூரி:
2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தை பலர் மறந்திருந்தாலும், அதில் இடம் பெற்றிருந்த ‘பரோட்டா’ காமெடியை யாரும் மறந்திருக்க மாட்டோம். அதற்கு காரணம், 50 பரோட்டாவை அலேக்காக விழுங்கி ரசிகர்களை சிரிக்க வைத்த நடிகர் சூரி தான். பார்ப்பதற்கு ஒல்லியான தோற்றத்துடன் இருக்கும் இவர், இந்த காமெடி சீனில் நடித்த போது உண்மையாகவே 17 பரோட்டாக்களை சாப்பிட்டாராம். இப்படி, இத்துணூண்டு பரோட்டா மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமான சூரி பிறந்ததது எங்கு தெரியுமா? அந்த பராேட்டாவிற்கு பிரபலமான மதுரையில்தான். கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு முன்பு, சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என்று லட்சியத்துடன் சென்னைக்கு வந்த இவரை, சினிமாவும் அன்பு கரம் கொண்டு வரவேற்றுக்கொண்டது.

ஆரம்பத்தில் கூட்டத்தில் ஒருவராக நடித்து வந்த இவருக்கு பெரிய வாய்ப்பை கொடுத்த படம்தான் ‘வெண்ணிலா கபடிக்குழு’. அதன் பிறகு பல முன்னணி ஹீரோக்களுக்கு நண்பனாக, எதிரியாக என காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்துவிட்டார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், சுந்தரபாண்டியன், ஜில்லா, ரஜினி முருகன் போன்ற படங்கள் இவரது காமெடிக்காகவே ஓடின.

மேலும் படிக்க | 8 வருட இடைவேளைக்கு பிறகு..திரையுலகில் கம்-பேக் கொடுக்கும் பிரபல நடிகர்!

ஹீரோவாக ப்ரமோஷன்:
பல ஆண்டுகளாக காமெடியனாக நடித்துக்கொண்டிருந்தவரை திடீரென்று விடுதலை படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்துவிட்டார், இயக்குனர் வெற்றிமாறன். அதுவரை இவரை காமெடியன் சூரியாக பார்த்துக்கொண்டிருந்தவர்கள், இப்படத்தின் மூலம் சூரியின் சீரியஸான முகத்தை பார்த்தனர். அந்த அளவிற்கு அழுத்தமிகு நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார். இதையடுத்து அவருக்கு தொடர்ந்து ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் வி. எஸ் . வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடித்த கொட்டுக்காளி படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பரவலான கவனம் பெற்றுள்ளது. இதனால் நடிகர் சூரி அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

கருடன்:
தற்போது இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில், சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் கருடன். இந்த படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த துள்ளது.

இந்நிலையில் தற்போது பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. ஆக்‌ஷனும், கதறலும், மிரட்டலுமாக முழு ட்ரைலரிலும் கவனம் பெறுகிறார் சூரி. மேலும் ரசிகர்களுக்கு விருந்தாக இந்த படம் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நடிகர் சூரியின் சம்பளம்:
இதனிடையே தற்போது கருடன் படத்திற்காக சூரி வாங்கியுள்ள சம்பளம் குறித்து வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சூரி கருடன் படத்திற்காக ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’ பட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News