தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நாயகி அந்தஸ்தில் இருப்பவர் நயன்தாரா. இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு இதே நாளில் தான் இவர்கள் திருமணம் நடைபெற்றது. செம சிறப்பாக நடைபெற்ற இவர்கள் திருமணம் தான் அன்றைய தினம் கண்டெண்ட்டே.
திருமணம் முடிந்த கையோடு திருப்பதி சென்ற அவர்கள், கோவில் வளாகத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்காக படப்பிடிப்பில் ஈடுபட்டனர். அப்போது வெயிலின் தாக்கத்தால் காலில் செருப்பு அணிந்தார் நயன்தாரா. அதேபோல வீடியோ எடுக்க வந்த குழுவினரும் செருப்பு அணிந்திருந்தனர். இது மிகப்பெரிய சர்ச்சையானது. பாஜகவினர் நயன்தாரா மீது வழக்கு கொடுக்கும் அளவுக்கு சென்றனர். ஆனால் அதற்குள் விக்கி மன்னிப்பு கடிதம் எழுதி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தங்கள் கல்யாணத்தையே திருப்பதியில் நடத்த வேண்டும் என்று நினைத்ததாகவும், இந்த சம்பவம் தெரியாமல் நடந்ததாகவும் சொல்லி இருந்தார்.
மேலும் படிக்க | கடுப்பான லோகேஷ் கனகராஜ்! சமாதானம் செய்வாரா விஜய்?
அடுத்ததாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் இவர்கள் திருமணத்தை ஓடிடியில் ஒளிபரப்பும் உரிமையை பெற்றது. திருமண வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என ஒப்பந்தம் செய்தது. ஆனால் விக்கி ஆர்வக்கோளாறில் சில கல்யாண புகைப்படங்களை வெளியிட அது மிகப்பெரிய பிரச்சனையானது. நயன் - விக்கி கல்யாண செலவை முழுவதுமாக நெட்பிள்ஸ் நிறுவனம் ஏற்றதாகவும் கூறப்பட்டது. அதன்பிறகு செலவு செய்த தொகையை திருப்பிக்கேட்டதாகவும், நயன்தாரா அவர்களை சமாதானம் செய்ததாகவும் சொல்லப்பட்டது.
அதன்தொடர்ச்சியாக சில நாட்களில் கல்யாண டீசர் வெளியானது. ஆனால் இன்று வரை அந்த கல்யாண வீடியோ மட்டும் வெளியாகவே இல்லை. கிட்டதட்ட ஓராண்டு ஆகியும் நயன் - விக்கி கல்யாண வீடியோ வெளியாகாததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.
கல்யாணம் ஆகி ஜாலியாக இருந்த நயன் - விக்கி ஜோடி திடீரென கடந்த ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக இன்ஸ்டாவில் பதிவிட்டனர். இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். பிறகு தான் தெரிந்தது வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்தது. உடனே இந்த விவகாரம் மிகப்பெரிய புயலைக்கிளப்பியது. திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆனபிறகு தான் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கும் நிலையில், எப்படி திருமணம் ஆன 4 மாதங்களில் இவர்கள் குழந்தை பெற்றெடுக்கலாம் என்ற விவாதம் அனைத்து சேனல்களிலும் நடந்தது.
தமிழக அரசு இதுகுறித்து விசாரணை நடத்தியது. அப்போது 5 ஆண்டுகளுக்கு முன்பே விக்கி - நயன் ஜோடி பதிவுத்திருமணம் செய்துகொண்டதாக ஆதாரங்களை கொடுத்ததும் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. ஆனால் அது இரு வரிகளில் எழுதியது போல சுலபமாக அமைந்துவிடவில்லை. விக்கி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக அவரே இன்ஸ்டாவில் பதிவிட்டார்.
இது முடிந்த கையோடு அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார் விக்கி. விக்கி சொன்ன கதை அஜித்துக்கு பிடிக்கவில்லை என்றும், அதனால் தான் அவரை நீக்கியதாகவும் பேசப்பட்டது. இதனால் உடைந்து போனார் விக்னேஷ் சிவன். அஜித்தை இயக்கும் வாய்ப்பு கைகூடாமல் போல வெக்ஸ் ஆனார். ஆனால் அதன்பிறகு அதிலிருந்து மீண்டு இப்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க முடிவெடுத்துள்ளார். அதில் முக்கிய ரோலில் நயன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இத்தனை பிரச்சனைகளுக்கும் நடுவே அனைத்திற்கும் மருந்தாய் காதலைத்தவிர வேறென்ன இருக்க முடியும் என்பதை அனைவருக்கு உணர்த்தி வருகின்றனர் விக்கி -நயன் ஜோடி. இன்று இவர்களின் திருமணம் நாள் என்பதால் விக்கி இன்ஸ்டாவில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், என் உயிரோட ஆதாரம் நீங்கள் தானே. இந்த ஒரு வருடம் பல ஏற்றத்தாழ்வுகளோடு சென்றது. சோதனை காலமாக அமைந்தது. ஆனால் ஆசிர்வதிக்கப்பட்ட குடும்பத்தை வீட்டிற்கு வந்து பார்க்கும் போது அவ்வளவு எனர்ஜி கிடைக்கிறது. என் உயிர் மற்றும் உலகத்தோடு கைகோர்த்து ஒன்றாக இருக்கிறேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | தமன்னாவிற்கு ஜெயிலர் ஷூட்டிங்கில் ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்...என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ