உருவாகிறது அப்துல் கலாம் திரைப்படம்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் குறித்த வாழ்க்கை வரலாற்றின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Last Updated : Feb 9, 2020, 07:25 PM IST
உருவாகிறது அப்துல் கலாம் திரைப்படம்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு title=

டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் குறித்த வாழ்க்கை வரலாற்றின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் குறித்த வாழ்க்கை வரலாறு உருவாகி வருகிறது. ஏபிஜே அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் திரு.பிரகாஷ் ஜாவடேகர் இன்று டெல்லியில் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியின் படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட மத்திய அமைச்சர் கூறியுள்ளதாவது:

இந்தியாவின் சின்னமான மக்கள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றின் ஃபஸ்ர்ட் லுக் போஸ்டர் டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. # Hollywood மற்றும் தெலுங்கு திரைப்படத்துறை இணைந்து தயாரிக்கும் இப்படம் 'APJ Abdul Kalam: The Missile Man' இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளது.

இப்படத்தை ஜகதீஷ் தானேட்டி, சுவர்ணா பப்பு மற்றும் மார்டினி பிலிம்ஸ் நிறுவனத்தின் ஜானி மார்டின் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தை 1 பில்லியனுக்கும் அதிகமான முதலீடு செய்கிறார்கள்.

 

 

 

Trending News