இயக்குனர் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து 2005-ல் வெளியான 'அந்நியன்' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.இது பன்மனோபாவ ஒழுங்கின்மை நோயினை மையமாகக் கொண்ட கதையாகும். 'அந்நியன்' சங்கரின் தயாரிப்பில் பெருந்தொகைப் பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மாறுபட்ட பிரம்மாண்ட திரைப்படமாகும்.
இந்தத் திரைப்படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சதா மற்றும் விவேக் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 26.38 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து இயக்க உள்ளதாகவும், விக்ரம் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிப்பார் என்றும் சங்கர் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதற்கு 'அந்நியன்' படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார்.
'அந்நியன்' படத்தின் கதைக்கான உரிமை தன்னிடம் உள்ளது என்றும், தனது அனுமதி பெறாமல் ஹிந்தியில் ரீமேக் செய்ய முடியாது என்றும் கூறினார். இதற்கு பதில் அளித்து சங்கர் கூறும்போது, “அந்நியன் கதை என்னுடையது. எனவே படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய யாருடைய அனுமதியும் கேட்க தேவையில்லை'' என்றார். பட வேலைகளையும் தொடங்கினார். இந்த நிலையில் அந்நியன் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக ஆஸ்கார் ரவிச்சந்திரனும் தற்போது அறிவித்து உள்ளார். அந்நியன் ஹிந்தி ரீமேக்கில் ஹிந்தி மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் நடிப்பார்கள் என்றும் தெரிவித்து உள்ளார். ஒரே படத்தை இரண்டு பேர் எடுக்க இருப்பதாக அறிவித்திருப்பது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR