புதுப்பேட்டை 2 படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் செல்வராகவன்

சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் "புதுப்பேட்டை 2" படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட இயக்குனர் செல்வராகவன்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 7, 2020, 01:02 AM IST
புதுப்பேட்டை 2 படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் செல்வராகவன் title=

சென்னை: சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 2006 மே மாதம் 26 ஆம் தேதி வெளியான "புதுப்பேட்டை" படம் பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்குனர் செல்வராகவன் (Selvaraghavan) இயக்கியிருந்தார். தனுஷ் (Dhanush), சோனியா அகர்வால், சினேகா, மற்றும் பலர் நடிப்பில் வெளியானது. பெரும் லாபத்தை தந்தது.

அந்த படத்தில் நடிகர் தனுஸின் "கொக்கி குமார்" என்ற கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. மீண்டும் இதுபோன்ற ஒருபடம், அதாவது "புதுப்பேட்டை" (Pudhupettai) படத்தின் இரண்டாவது பாகம் எப்போ வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் கேட்டுக்கொண்டே இருந்தனர்.

சமீபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில், அண்ணன்-தம்பி (செல்வராகவன்-தனுஷ்) கலந்துக்கொண்டனர். அப்பொழுது அவர்களிடம் "புதுப்பேட்டை 2" படம் எப்போ வரும் எனக் கேள்வி எழுப்பட்டது. அதற்கு நடிகர் தனுஷின் அண்ணன் இயக்குனர் செல்வராகவன் (Selvaraghavan), "தனுஷ் கால்ஷீட் கொடுத்தால் புதுப்பேட்டை 2 படம் எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்தநிலையில், இன்று ஒரு கல்லூரி விழாவில் கலந்துக்கொண்ட பேசிய இயக்குனர் செல்வராகவன், "எனது NGK படத்திற்கு பிறகு, நான் இயக்கும் அடுத்த படம், தனுஷ் கூட "புதுப்பேட்டை 2" படம் தான் என்றார். இதைகேட்ட மாணவர்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தினர்.

இயக்குனர் செல்வராகவன் அறிவிப்பை அடுத்து "புதுப்பேட்டை 2" வெளிவருவது நிச்சயம். ஆனால் எப்பொழுது படம்பிடிப்பு என்று அவர் கூறவில்லை. தனுஷ் மற்ற படங்களை முடித்துவிட்டு, அதன் பிறகு அண்ணனுடன் இணைந்து பணியாற்றுவார் எனத் தெரிகிறது. 

Trending News