‘Rowdy Baby’ பாடலை முடக்கிய ஹேக்கர்ஸ்?- காரணம் என்ன?!

தனுஷ் மற்றும் தீ பாடிய ரவுடி பேபி பாடல்  யூடியூப்பில் முடக்கப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 17, 2022, 11:08 AM IST
  • தனுஷின் ரவுடி பேபி பாடல் திடீர் முடக்கம்
  • தனுஷ் மற்றும் தீ பாடிய பாடல் ரவுடி பேபி
  • யுவன் இசையில் மாரி-2வில் இடம்பெற்ற பாடல்
‘Rowdy Baby’ பாடலை முடக்கிய ஹேக்கர்ஸ்?- காரணம் என்ன?!  title=

நடிகர் தனுஷ் நடிப்பில்  கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் மாரி-2. மாரி முதல் பாகத்துக்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில் இரண்டாவது பாகத்துக்கு யுவன் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் இடம்பெற்றிருந்த ரவுடி பேபி பாடல் பட்டி தொட்டியெங்கும் பாப்புலர் ஆனது. தனுஷ் மற்றும் தீ பாடிய இப்பாடலை தனுஷே எழுதியும் இருந்தார். பிரபுதேவா நடன இயக்குநராக பணிபுரிந்த இப்பாடலில் தனுஷ் மற்றும் நடிகை சாய் பல்லவியின் நடனம் நல்ல கவனம் பெற்றது.

இணையத்தைத் துவம்சம் செய்த இந்தப்பாடல்,  யூடியூப்பில் மிக விரைவில் அதிக பார்வைகளைப் பெற்ற தமிழ்ப்பாடல் எனும் சாதனையை அப்போது படைத்திருந்தது. அதாவது வெறும் 17 நாட்களில் 10 கோடி பார்வைகளை அப்பாடல் தொட்டது.

                      

வெகு நாட்களாக இப்பாடலே சாதனையில் இருந்த நிலையில் அண்மையில் வெளியான பீஸ்ட் படத்தின் அரபிக் குத்துதான் இதனை உடைத்தது. விஜய்யின் அரபிக் குத்து பாடல் வெறும் 12 நாட்களிலேயே 10 கோடி பார்வைகளைப் பெற்று சாதனை படைத்தது. தற்போது வரை அரபிக் குத்துதான் முதலிடத்தில் உள்ளது.

மேலும் படிக்க | விருது மழை பொழிந்த சூர்யாவின் ‘சூரரைப் போற்று’- சர்வதேச பட விழாவில் சாதனை!

இந்நிலையில் தனுஷின் ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் முடக்கப்பட்டுள்ளது. அப்பாடல் மட்டுமல்லாமல் அதனை வெளியிட்ட wunderbar films சானலும் முடக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் முடக்கம் இணையத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. ஹேக்கர்ஸ் யாரும் சானலை முடக்கினார்களா, முடக்கத்துக்கான காரணம் என்ன என தொடர் விவாதங்களும் இணையத்தில் நடந்துவருகின்றன.

மேலும் படிக்க | VJ சித்ராவைத் தொடர்ந்து மற்றொரு இளம் சீரியல் நடிகை மர்ம மரணம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News