முதல்வர் ஆக ஆசைப்படும் தனுஷ்! நிறைவேறுமா?

நடிகர் தனுஷுக்கு ஒரு படத்திலாவது முதல்வர் வேடத்தில் நடித்துவிட வேண்டும் என்பது தீராத ஒரு ஆசையாக இருந்து வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : May 22, 2022, 01:17 PM IST
  • தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார்.
  • பல படங்கள் அவரது நடிப்பில் வெளிவர உள்ளது.
  • சமீபத்தில் மாறன் படம் வெளியானது.
முதல்வர் ஆக ஆசைப்படும் தனுஷ்! நிறைவேறுமா? title=

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழும் நடிகர் தனுஷுக்கு குறிப்பிடத்தக்க ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.  நடிகர் என்பதை தாண்டி இவர் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல திறமைகளை திரையுலகில் வெளிக்காட்டி வருகிறார்.  இவரது படங்கள் பெரும்பாலும் எதார்த்தமானதாகவும், பலரும் விரும்பி பார்க்கும் வகையிலும் அமைந்திருக்கும்.  சிறந்த நடிகருக்கான விருது போன்ற பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.  பல படங்களில் பல வேடங்களில் நடித்திருந்த இவருக்கு ஒரு படத்திலாவது முதல்வர் வேடத்தில் நடித்துவிட வேண்டும் என்கிற ஆசை இருக்கிறதாம்.

Dhanush

மேலும் படிக்க | 'தளபதி 66' படத்தில் விஜய்யுடன் இணையும் பிரபுதேவா?

ஏற்கனவே அரசியல் சம்மந்தப்பட்ட படங்களான புதுப்பேட்டை மற்றும் கொடி போன்ற படங்களில் நடித்திருந்தார், ஆனால் இந்த இரண்டு படங்களிலும் அவர் முதல்வராக நடிக்கவில்லை.  அதனால் தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான 'லீடர்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தனுஷ் ஆர்வமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.  அந்த படத்தில் நடிகர் ராணா முதல்வராக நடித்து இருந்தார், அதனால் இரண்டாம் பாகத்தில் தான் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும் என்று ஆசையாக காத்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் இயக்குனர் சேகர் கம்முலா, லீடர் படத்தின் இரண்டாம் பக்கத்தில் நடிக்கவைக்க கதாநாயகனை தேடிக்கொண்டிருந்தபோது, தனுஷே நேரடியாக சென்று அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை தனக்கு தருமாறு கேட்டு இருக்கிறார்.  பரபரப்பான பல திருப்பங்களுடன், த்ரில்லிங்காக உருவாகும் இந்த அரசியல் கதையம்சம் கொண்ட படத்தில் நடிகர் தனுஷ் சக்தி வாய்ந்த ஒரு முதல்வராக நடிக்கப்போகிறார் என்றும், பல அரசியல்வாதிகளுக்கும் சவுக்கடி கொடுக்கும் விதமாக இந்த படம் அமையும் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.  இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | பரத் மற்றும் வாணி போஜனின் காதல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News