கார்த்தி-ன் தேவ் படம் பாருங்க, BMW சூப்பர் பைக் வெல்லுங்க!!

தேவ் படம் பார்த்தால் 2 பிஎம்டபுள்யூ பைக் பரிசாக கிடைக்கும் என்று படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Last Updated : Feb 19, 2019, 01:06 PM IST
கார்த்தி-ன் தேவ் படம் பாருங்க, BMW சூப்பர் பைக் வெல்லுங்க!! title=

தேவ் படம் பார்த்தால் 2 பிஎம்டபுள்யூ பைக் பரிசாக கிடைக்கும் என்று படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் உருவாகி உள்ள "தேவ்" படம் கடந்த பிப்ரவரி 14ம் தேதி வெளியானது. இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளார். கிரைம் த்ரில்லர் கலந்த காதல் படமான இதில் கார்த்திக், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். 

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை ரூபன் கவனித்துள்ளார். ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லஷ்மண்குமார் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் கார்த்தி பிஎம்டபுள்யூ சூப்பர் பைக் ஓட்டியிருந்தார். தற்போது அதே பைக்கை வெல்லும் வாய்ப்பு மக்களுக்கும் கிடைத்துள்ளது. இது குறித்து தேவ் படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

 

 

உங்கள் குடும்பத்தில் தேவ் போன்று வாழ்க்கையை நேசித்து வாழ்பவர்‌ யாராவது உள்ளனரா?. ஆம் என்றால் அவர்களை உலகிற்கு காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தேவ் திரைப்பட குழுவினர் சார்பில் அவர்களுக்காக  2 (இரண்டு) BMW சூப்பர் பைக்குகள் பரிசாக காத்திருக்கின்றன.

போட்டி பற்றிய விவரங்கள்:-

நீங்களோ அல்லது, உங்கள் குடும்பத்தினரோ அல்லது உங்கள் நண்பர்களோ ஏன் இந்த BMW SUPER BIKE ஐ வெல்ல வேண்டும் என்பதற்கான காரணத்தை எங்களுக்கு விளக்கி எழுதுங்கள்.

அதோடு  பின்வரும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: கேள்வி 1: தேவ் திரைப்படத்தில், வாழ்க்கையை பற்றிய தேவின் சித்தாந்தமும், படத்தில் அவருடைய தொழிலும் என்ன? கேள்வி 2: தேவ் திரைப்படத்தில்,  மேக்னா பணத்தின்‌ மீது அதிக பற்று உடையவரா? கேள்வி  3: தேவ் திரைப்படத்தில் தேவ்-மேக்னா பிரிவிற்கான காரணம் என்ன?

ஒவ்வொரு கேள்விகளுக்குமான பதிலை 100 வார்த்தைகளுக்கு மிகாமலும் அல்லது உங்கள் பதிலை எங்களுக்கு  வீடியோ மூலமாகவும் அனுப்பலாம். போட்டிக்கான கடைசி தேதி: 25.02.2019 

பதில் அனுப்புபவர்களிடம் இருந்து சரியான பதில்களை தேவ் திரைப்பட குழுவினர் தேர்ந்தெடுத்து 2  வெற்றியாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்வர். வெற்றியாளர்களுக்கு நடிகர் திரு. கார்த்தி அவர்கள் அந்த 2 BMW சூப்பர் பைக்குகளை வழங்குவார்.

பரிசு வழங்கப்படும் தேதியை 28. 02. 2019 அன்று தேவ் திரைப்பட குழுவினர் அறிவிப்பார்கள். பதில்களை பின்வரும் மின்னஞ்சல் ஐடி-க்கோ அல்லது பின்வரும் மொபைல் எண்ணிற்கு Whatsapp மூலமாகவோ அனுப்ப வேண்டும். devbikecontest@gmail.com (மின்னஞ்சல்) 90000 90000 (WHATSAPP)

* குறிப்பு: -

1. 2019ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதிக்குப் பின்னர் பெறப்படும் பதிவுகள் பரிசீலிக்கப்படாது. 
2. தேவ் திரைப்பட குழு முடிவே இறுதியானது. 
3.  மேலே குறிப்பிடப்பட்ட போட்டி மற்றும் பரிசு விநியோகம் இந்திய சட்டங்களின் படி இருக்கும்.

என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News