தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சிஸ்கே வீரரின் சகோதரி!

சிஸ்கே அணி வீரரான தீபக் சஹாரின் சகோதரி மால்தி சஹார் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 30, 2021, 01:19 PM IST
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சிஸ்கே வீரரின் சகோதரி! title=

திரைப்படங்களை இயக்குவது மற்றும் பாடல்கள் எழுதுவது மட்டுமின்றி, விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் பேனரின் கீழ் பல சுவாரஸ்யமான படங்களை தயாரித்து வருகிறார்.  அவரது தயாரிப்பில் கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கபட்டுள்ளது.  மேலும், நிறைய விருதுகளையும் பெற்று வருகிறது.  மேலும், ராக்கி என்ற திரைப்படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளார்.  

ALSO READ தனுஷ் மேல் சட்ட நடவடிக்கை - நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில் அடுத்ததாக Walking/Talking Strawberry Icecream என்கிற புதிய படத்தையும் தயாரிக்க உள்ளார் விக்னேஷ் சிவன்.   இது இளைஞர்களின் மனம் கவரும் காதல் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.   இப்படத்தில் சூரரைப்போற்று திரைப்படத்தில் 'சே' கதாபாத்திரத்தில் நடித்த கிருஷ்ண குமார் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.  விநாயக் என்கிற புதுமுக இயக்குனர் இப்படத்தை இயக்க உள்ளார்.  இப்படத்தில் ரசிகர்கள் சுவாரஸ்யபடும் விதமாக சிஸ்கே அணி வீரரான தீபக் சஹாரின் சகோதரி மால்தி சஹார் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.  

mlatichahar

சிஸ்கே அணி விளையாடும் போட்டிகளில் மைதானத்தில் போட்டியை பார்க்க வரும் மால்தி சஹார்ரை பார்க்கவே தனி ரசிகர் பட்டாளமே உண்டு.  இன்ஸ்டாகிராமில் அவரது புகைப்படங்கள் வைரல் ஆகும்.  இப்படத்தில் நடிப்பது பற்றி மால்தி சஹார் தனது சமூக வலைத்தளங்களில், "விநாயக் எழுதி இயக்கிம் இந்த அருமையான திரைப்படமான #WalkingTalkingStrawberryIcecreamன் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.   நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவர்களின் தயாரிப்பில் நடிப்பதில் மகிழ்ச்சி.   இந்த படம் அற்புதமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்!" என்று தெரிவித்துள்ளார்.  முன்னதாக இப்படத்தில் பாடகர் ஜோனிடா காந்தி நடிப்பதாக இருந்தது.  அதன்பின் தற்போது மால்தி சஹார் நடிக்க இருக்கிறார்.  விக்னேஷ் சிவன் தற்போது காதுவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

ALSO READ 26 வருடங்களுக்கு பிறகு தீபாவளி தினத்தில் வெளியாகும் ரஜினி படம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News