டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியீடு..! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது..?

DD Returns OTT Release: சந்தானம் நடிப்பில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Sep 1, 2023, 10:17 AM IST
  • சந்தானம் நடிப்பில் வெளியான படம், டிடி ரிட்டர்ன்ஸ்.
  • கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது.
  • இன்று ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியீடு..! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது..? title=

தமிழ் சினிமாவில், துணை நடிகராக இருந்து பின்பு காமெடி நடிகராக வளர்ந்து, தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டிருப்பவர் சந்தானம். இவர் நடிப்பில் கடந்த மாதம், டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வெளியானது.

டிடி ரிட்டர்ன்ஸ்:

காமெடி ஹீரோ சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை எஸ்.பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில், நாயகியாக நடிகை சுரபி நடித்துள்ளார். இவர்கள் மட்டுமன்றி இதற்கு முன்னர் சந்தானத்துடன் சில படங்களில் இணைந்து நடித்த மொட்டை ராஜேந்திரன், முனிஸ்காந்த் இந்த படத்தில் நடித்துள்ளார். ரெடின் கிங்ஸ்லி, மசூம் ஷங்கர், பிரதீப் ராம் உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர்.  2016ஆம் ஆண்டு வெளியான தில்லுக்கு துட்டு படம்தான் சந்தானம் நடித்த நாயகனாக நடித்த முதல் பேய் படம். பேய்-நகைச்சுவை கான்செப்ட் வர்க் அவுட் ஆக, அவர் தொடர்ந்து தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தார். 2019ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பினை பெற்றது. இதைத்தொடர்ந்து மூன்றாம் பாகமாக வெளியாகியுள்ள படம்தான் டிடி ரிட்டன்ர்ஸ். 

மேலும் படிக்க | குழந்தைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு போஸ் கொடுக்கும் நயன்! வைரலாகும் க்யூட் போட்டோஸ்!

ஓடிடியில் வெளியீடு:

டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம், கடந்த மாதம் (ஜூலை) 28ஆம் தேதியன்று வெளியானது. இந்த படம், இன்று (செப்., 1) பிரபல ஓடிடி தளமான ஜீ 5யில் வெளியாகியுள்ளது. ஜீ 5 தளத்தில் சந்தா செலுத்தி கணக்கு வைத்திருப்போர் இந்த படத்தை ஆன்லைனில் பார்க்கலாம். ஜீ 5 தளத்தை மொபையில் பார்ப்போர் 12 மாதங்களுக்கு 499 ரூபாய் செலுத்தி கணக்கை தொடங்கலாம். பிரீமியம் ஹெச்டி கணக்கிற்கு வருடத்திற்கு 699 சந்தா செலுத்த வேண்டும். பிரீமியம் 4K கணக்கிற்கு வருடன் ரூ.1,499 வரை சந்தா செலுத்த வேண்டும். 

டிடி ரிட்டர்ன்ஸ் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன்..! 

டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 1.2 கோடி அளவு வசூல் செய்தது. இந்த படம், மொத்தம் 12 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருந்தது. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 400 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டிருந்தது. படம், சுமார் 28 கோடி வரை வசூல் செய்து வெற்றி பெற்றது. 

இன்னொரு படமும் ரிலீஸ்..

சந்தானம் நடிப்பில் உருவான இன்னொரு படமும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ‘கிக்’ என்ற அந்த படத்தை பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தான்யா ஹோப் நடித்துள்ளார். இவர்களுடன் பிரபல தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம் முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார். எப்போதும் போல இதுவும் சந்தானத்தின் காமெடி படமாக இருக்கும். இந்த படமும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனின் வெற்றி பெறும் என நம்பப்படுகிறது. 

காமெடி நடிகர் டூ ஹீரோ:

மக்கள் மனங்களில் இடம் பிடித்து பிரபல காமெடி நிகழ்ச்சியாக விளங்கியது, ‘லொள்ளு சபா’ இதன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் சந்தானம். கோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்ளில் கதாநாயகனுக்கு சகோதரனாகவும் நண்பனாகவும் நடித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து “இனி நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன்” என்று சபதம் எடுத்த இவர் தற்போது காமெடி ஹீரோவாக நடித்து வருகிறார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,  டிக்கிலோனா, தில்லுக்கு துட்டு, போன்ற வித்தியாசமான கதையம்சம் நிரம்பிய படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.

மேலும் படிக்க | ஒரே நாளில் 6 படங்கள் தியேட்டரில் ரிலீஸ்..! எந்த படத்தை முதலில் பார்ப்பது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News