ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் `தர்பார்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மும்பையில் துவங்கியது.
ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் ரஜினியின் 167-வது படத்திற்கு `தர்பார்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது.
மும்பை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு பணிகளையும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பையும், டி.சந்தானம் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர். ராம் லக்ஷ்மன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, விவேக் பாடல்களை எழுதுகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.
இந்நிலையில் `தர்பார்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மும்பையில் துவங்கியது.
#DARBAR Shoot begins today with a formal POOJA at Mumbai@rajinikanth @ARMurugadoss #Nayanthara @anirudhofficial @santoshsivan @sreekar_prasad #TSantanam @Lyricist_Vivek#IdhuThalaivarinDarbar pic.twitter.com/cMoX1DR5ey
— Lyca Productions (@LycaProductions) April 10, 2019