விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி விக்னேஷ் சிவன் சென்னை தாஜ் ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். சென்னையில் இருக்கும் பிரபலமான அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகத்தினரும் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். பிரபலமான தனியார் செய்தித் தொலைக்காட்சியைச் சேர்ந்த நிருபர் ஆனந்தன் விக்னேஷ் சிவனுடன் புகைப்படம் எடுக்கச் சென்றார். அப்போது, அங்கிருந்த அஜித்தின் மேலாளார் சுரேஷ் சந்திரா, நிருபர் ஆனந்தை பார்த்து மிரட்டல் தொனியில் யார் என கேட்டதுடன், செய்தி நிறுவனத்தையும் அவதூறாக பேசியதாக தெரிகிறது.
மேலும் படிக்க | 'விக்ரம்' மெகா ஹிட் எதிரொலி - 6 ஆண்டுகளுக்கு பின் மீண்டு வருகிறார் 'சபாஷ் நாயுடு'!
பதிலுக்கும் ஆனந்தனும் அவரை பார்த்து யார் என கேட்க வாக்குவாதம் ஆகியுள்ளது. சிறிதுநேரம் கழித்து ஆனந்தன் சுரேஷ் சந்திராவுக்கு அழைத்து வருத்தம் தெரிவிக்க முயன்றுள்ளார். ஆனால், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, நிரூபர் ஆனந்தின் அழைப்பை ஏற்கவில்லை. இதனால், பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்ற இடத்துக்கு சென்ற அவர், முன்பு ஏற்பட்ட நிகழ்வு குறித்து பேச முற்பட்டுள்ளார். ஆனால் சுரேஷ் சந்திரா மற்றும் அவரது உதவியாளர்கள் நாசர், தியாகு ஆகியோர் நிரூபர் ஆனந்தை தாக்கியதுடன், கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியுள்ளனர்.
இதுகுறித்து நிரூபர் ஆனந்தன், அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா மற்றும் அவரது உதவியாளர்கள் தியாகு, நாசர் மீது அண்ணாசாலை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், செய்தி சேகரிக்கச் சென்ற தன்னையும், நிறுவனத்தையும் சுரேஷ் சந்திரா அவதூறாக பேசியதாக கூறியுள்ளார். மேலும், பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்ற இடத்தில் இருந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியதாகவும் கூறியுள்ள ஆனந்தன், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | ‘ரஜினி-169’ படத்தில் கே.எஸ்.ரவிக்குமார்! - இயக்குநர் நெல்சன் நீக்கமா?!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR