யூரிக் அமிலம் இரத்தத்தில் கரைந்து சிறுநீர் மூலம் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இதன் அளவு அதிகரிக்கும் போது உடலில் படிய தொடங்குகிறது. இது கீல்வாதம், சிறுநீரக கற்கள் போன்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
யூரிக் அமிலம் முதலில் கால்விரல்கள், குதிகால் ஆகியவற்றை அதிகம் பாதிக்கிறது. இதனால் ஏற்படும் வலி நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.
யூரிக் அமில அளவு அதிகரிக்கும் போது மூட்டுகளில் அதிக வலி ஏற்படும். மேலும் அந்த இடம் முழுவதும் சிவப்பாகவும், வீக்கமாகவும் மாறும்.
உடலில் யூரிக் அமிலம் அதிகமானால் தோலில் டோஃபி எனப்படும் கட்டிகள் உருவாகலாம். அப்படி கட்டி ஏற்பட்டால் கால்கள் மற்றும் கைகளில் வலிகளை ஏற்படுத்தும்.
யூரிக் அமில அளவு உடலில் அதிகரித்தால் சிறுநீரின் நிறம் மாறும் மற்றும் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். அதிக யூரிக் அமிலத்தை இரத்தப் பரிசோதனை மூலமும் கண்டறிய முடியும்.
உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால் அதிக சோர்வு மற்றும் பலவீனத்தை ஏற்படுத்தும். எனவே இதுபோன்ற அறிகுறிகளை கண்டால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.