இந்தியன் 2 பட ஒளிப்பதிவாளர் வெளியிட்ட புகைப்படம்.. ரசிகர்கள் உற்சாகம்

அந்நியன் , வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், ஏழாம் அறிவு, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களை தனது ஒளிப்பதிவு செய்த உயர்த்திய ரவிவர்மன் தற்போது இந்தியன் 2 திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்து வருகிறார். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 3, 2023, 05:15 PM IST
  • 5 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியன் 2 படப்பிடிப்பு பணிகள் ஆரம்பித்தது.
  • இதன் இறுதிக்கட்ட பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
  • மணிரத்தினம் இயக்கத்தில் KH234 படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தியன் 2 பட ஒளிப்பதிவாளர் வெளியிட்ட புகைப்படம்.. ரசிகர்கள் உற்சாகம்  title=

1996ஆம் ஆண்டு வெளியாகி பட்டித்தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பிய படம், இந்தியன். உலக நாயகன் கமல் ஹாசன் தந்தையாகவும் மகனாகவும் இரண்டு வேடங்களில் இப்படத்தில் நடித்திருந்தார். கவுண்டமனி, செந்தில், கஸ்தூரி, மனிஷா கொய்ராலா, சுகன்யா ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகமான இந்தியான்-2 இப்போது படப்பிடிப்பு மற்றும் பட வேலைகளின் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த படத்திலும் கமலே ஹீரோவாக நடிக்கிறார். மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இளசுகளுக்கு பிடித்த ‘ராக்ஸ்டார்’ அனிருத் இப்படத்திற்கு இசையமைகக்கிறார். 

சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஆரம்பமான நிலையில் பல்வேறு காரணங்களால் அதற்கு தடை ஏற்பட்டது. இதையடுத்து, ஒருவழியாக இதன் இறுதிக்கட்ட பணிகள் நடைப்பெற்று வருகின்றன. ஷங்கர்-அனிருத் காம்போவை முதன் முறையாக ரசிகர்கள் திரையில் காண உள்ளனர்.

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனை ரஜினியுடன் ஒப்பிட்ட மிஷ்கின்..! எந்த விஷயத்தில் தெரியுமா..?

அதேபோல் பலரது எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகிவரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு உலகின் பல்வேறு மூலைகளில் நடைப்பெற்றது. பீகார், தென் ஆப்ரிக்கா, தைவான் உள்ளிட்ட இடங்களில் நடைப்பெற்ற படப்பிடிப்பானது தற்போது சென்னையில் நடைப்பெற்று வருகிறது. இயக்குநர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இதுவும் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. 

இந்த நிலையில் அந்நியன் , வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், ஏழாம் அறிவு, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களை தனது ஒளிப்பதிவு செய்த உயர்த்திய ரவிவர்மன் தற்போது இந்தியன் 2 திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் ஷங்கரோடு இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை தற்போது காலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரவிவர்மன் "இந்தியன் 2 திரைப்படம் ஒரு சாகச சவாரி தான்" என குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் இந்த பதிவால் தற்போது ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ravi Varman (@r_varman_)

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் KH234 படத்தில் நடிக்க இருக்கிறார். முன்னதாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கும் ஒரு படத்தில் திரைக்கதை எழுதி நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. 

முன்னதாக இந்தியன் 2 படம் குறித்து... கமல்ஹாசன் பதிவு ஒன்றை போட்டு, இயக்குனர் ஷங்கருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் பரிசு ஒன்றையும் வழங்கியிருந்தார். மேலும் பதிவு வெளியிட்டு இருந்த அவர் அதில், ‘இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் ஷங்கர். இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி. அன்பன் கமல்ஹாசன் என பதிவிட்டுயிருந்தார். இதுகுறித்த புகைப்படமும் அப்போது வைரலானது என்பது குறிப்பிடத்தக்கதுவருகிறது.

மேலும் படிக்க | தனுஷ் உள்பட பல திரை பிரபலங்கள் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News