வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் முதல் தெலுங்கு படம் 'வாத்தி' (Vaathi movie). இப்படத்தில் சம்யுக்தா மேனன், சாய் குமார், தணிகெல்ல பரணி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை சித்தாரா என்டர்டெயின் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் (GV Prakash) இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது, தமிழில் 'வாத்தி' என்றும் தெலுங்கில் 'சார்' என்றும் பெயரிடப்பட்டு உள்ளது.
With lot of passion , heart and faith … #vaathi #sir shooting in progress pic.twitter.com/lZUhQkPTGy
— Dhanush (@dhanushkraja) January 7, 2022
ALSO READ | கெளதம் மேனன் படத்தில் 5 வித கெட்-அப்களில் நடிக்கும் சிம்பு!
சமீபத்தில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, பள்ளி மாணவன் கெட்டப்பில் தனுஷ் இருக்கும் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த தினேஷ் கிருஷ்ணன் இப்படத்திலிருந்து விலகுவதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார். துரதிஷ்டவசமாக 'வாத்தி' படத்திலிருந்து விலகுகிறேன், விரைவில் வெங்கி அட்லுரி, வம்சி கூட்டணியில் இணைந்து பணிபுரிவேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அதில் #covid என்று அவர் பதிவிட்டுள்ளதால் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும், அதன் காரணமாக அவர் இந்த படத்திலிருந்து விலகுகிறார் என்று யூகிக்கப்படுகிறது.
It is unfortunate that I couldn’t be a part of @dhanushkraja’s #vaathi #SIRmovie Hoping to work soon with @Fortune4Cinemas @SitharaEnts @vamsi84 #venkyatluri . #covid pic.twitter.com/fjRq9GYsiJ
— Dinesh krishnan DP (@dineshkrishnanb) January 25, 2022
கடந்த 2013ம் ஆண்டு நளன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான நகைச்சுவை கலந்த க்ரைம் படமான 'சூது கவ்வும்' படத்தின் மூலம் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவாளராக திரைத்துறையில் நுழைந்தார். அதன் பின்னர் தொடர்ச்சியாக இவர் தெகிடி, கப்பல், சேதுபதி, ரெக்க மற்றும் காதலும் கடந்து போகும் படத்தில் பணியாற்றினார். அதனையடுத்து 2017ல் நயன்தாரா நடிப்பில் வெளியான திகில் படமான 'டோரா' படத்திலும் இவர் பணியாற்றினார். விக்னேஷ் இயக்கத்தில் சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திலும், மூக்குத்தி அம்மன் படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | விஜயை விமர்சித்த தனி நீதிபதியின் கருத்துகளை நீக்கியது ஐகோர்ட்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR