பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு உருவாக்கபட்ட ‘சஞ்சு’ (Sanju) படம் கடந்த வெள்ளிக்கிழமை (June 29) உலக முழுவதும் வெளியானது. இந்த படத்தில் சஞ்சய் தத் வேடத்தில் ரன்பீர் கபூரும், சஞ்சய் தத்தின் அப்பா (சுனில் தத்) வேடத்தில் பரேஷ் ராவல், அவருக்கு அம்மாவாக மனிஷா கொய்ராலாவும் நடித்துள்ளனர்.
ரவுடி, போதைக்கு அடிமை, மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறை தண்டனை என பல பரபரப்புகளை கொண்ட சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்று படம் என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
கடந்த ஜூன் 29 (வெள்ளிக்கிழமை) ‘சஞ்சு’ படம் உலக முழுவதும் 5300 திரையரங்கில் வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவில் மட்டும் 4000 திரையிலும், வெளிநாடுகளில் 1300 திரையிலும் வெளியானது.
Non-holiday / working day... Reduced ticket rates on weekdays... Yet, #Sanju puts up a SPLENDID TOTAL on Day 4 [Mon]… This one is NOT going to slow down soon... Fri 34.75 cr, Sat 38.60 cr, Sun 46.71 cr, Mon 25.35 cr. Total: ₹ 145.41 cr. India biz.
— taran adarsh (@taran_adarsh) July 3, 2018
இதுவரை இந்த படம் 200 கோடி வசூல் செய்துள்ளது. இந்திய பாக்ஸ் ஆபிசில் மட்டும் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 153.92 கோடி வசூல் செய்துள்ளது. வெளிநாடுகளில் அமெரிக்காவில் 25 லட்சம் டாலர், வளைகுடா நாடுகளில் 18 லட்சம் டாலர், ஆஸ்திரேலியாவில் 6,50,000 டாலர்கள், பிரிட்டனில் 6 லட்சம் டாலர் வசூல் ஆகியுள்ளது. நமது அண்டை நாடான பாகிஸ்தானில் இதுவரை 8 லட்சம் டாலர் ஆகியுள்ளது.
‘சஞ்சு’ படத்தை பற்று விமர்சர்கள் நல்ல அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர். இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்ப்பை பார்த்தால், இந்த ஆண்டில் (2018) அதிக வசூல் ஈட்டிய படம் என்ற பெருமையை பெரும் என எதிர் பார்க்கப்படுகிறது. "பாகுபலி 2" இந்தி படத்தின் வசூலை முந்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Too early to predict the lifetime biz of #Sanju... Will it surpass Hirani’s highest grosser #PK Will it challenge #Dangal [highest Hindi grosser after #Baahubali2]? Much depends on how #Sanju fares in Week 2... It’s a wait-and-watch situation right now!
— taran adarsh (@taran_adarsh) July 3, 2018