அட்லீ இயக்கும் பாலிவுட் படம்! பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு!

ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தொடர்ந்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்குகிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 3, 2021, 07:48 PM IST
அட்லீ இயக்கும் பாலிவுட் படம்! பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு! title=

ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தொடர்ந்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்குகிறார்.

atlee

இப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஷாருக்கான்’ என்றும் ‘எஸ்.ஆர்.கே’ என்றும் எல்லோராலும் அழைக்கப்படும் ஷாருக்கான் அவர்கள், ‘பாலிவுட்டின் பாட்ஷா‘ என்றும், ‘கிங் கான்’ என்றும், ‘கிங் ஆஃப் ரொமான்ஸ்’ என்றும் ஊடகங்களால் வழங்கப்படுகிறார்.   எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தொலைக்காட்சி மூலமாகத் திரை முன்பு தோன்றிய அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, பாலிவுட்டில் கால்பதித்தார். ஹீரோ என்ற அந்தஸ்தைக் கைப்பற்றி, முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் தனது பெயரைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

sharukhan

இந்நிலையில்,இவரை வைத்து அட்லீ இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று புனேவில் தொடங்கியுள்ளது. இதில் ஷாருக்கான், நயன்தாரா கலந்துகொண்டுள்ளனர். இதனால் படப்பிடிப்பு தளத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.   இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார்களாம். பிரம்மாண்ட பட்ஜெட்டில் அதிரடி சண்டைக் காட்சிகளுடன் கூடிய ஆக்‌ஷன் படமாக இது தயாராகிறது.

ALSO READ அந்தரங்க கேள்விக்கு அசால்டாக பதில் சொன்ன நடிகை !

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News